புதன், 26 செப்டம்பர், 2018

ஆதார் எங்கு அவசியம்.. எங்கு அவசியம் இல்லை.. முழு விபரம்!

டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.



பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்

இதில் ஆதார் பாதுகாப்பானது. ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன் காரணமாக பின்வரும் விஷ்யங்களுக்கு ஆதார் தேவைப்படுகிறது.

ஆதார் எங்கு அவசியம்?

ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.அரசு சார்ந்த திட்டங்களில் பெற ஆதார் அவசியம் ஆகும்.பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம்.மத்திய, மாநில அரசு வகுத்து இருக்கும் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம்.ரேஷன் கடைகளில் ஆதார் அவசியம். சமையல் காஸ் மானியம் பெற ஆதார் அவசியம்.வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம்

எதற்கு அவசியம் இல்லை?

வங்கிக் கணக்குடன் இணைக்கத் தேவையில்லை.செல்போன் வாங்க, சிம் கார்ட் வாங்க தேவையில்லை.கார், பைக் வாங்கும் சமயத்தில் ஆதார் கொடுக்க வேண்டியதில்லை.நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஆதார் அளிக்க வேண்டியதில்லை.ஆன்லைன் தொடர்பான வர்த்தகத்தில் ஆதார் தேவையில்லை.தனியார் தொடர்பாகி உள்ள எதிலும் ஆதார் அவசியம் இல்லை.பள்ளி, கல்லூரியில் சேர அவசியம் இல்லை.மருத்துவ சேவைகளுக்கு ஆதார் தேவையில்லை.உணவு உள்ளிட்ட அடிப்படை உரிமை சார்ந்த சேவைகளுக்கு ஆதார் தேவையில்லை