புதன், 3 அக்டோபர், 2018

அரசு தொடக்கபள்ளியில் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் காலை உணவு திட்டம்

துடியலுார் அருகே உருமாண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.உருமாண்டம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 55 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அடிப்படை வசதி இருந்தும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.


இப்பள்ளி முன்னாள் மாணவர்கள், ஊர் பெரியவர்கள், இந்தியன் உடல் நல உதவி மற்றும் நடைபயிற்சி அமைப்பு சார்பில் காலை உணவு திட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் துவக்கப்பட்டது.இதையொட்டி, திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.பி., கிருஷ்ணன் தலைமை வகித்தார். கண்ணன், குமாரசாமி, பாபு, ஆடிட்டர் ராமசாமி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை கண்ணன் துவக்கி வைத்தார்.