மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய சிபிஐக்கு தடைவிதித்து சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா
ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது போல் கர்நாடகாவும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது.
தற்போது சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய சிபிஐக்கு தடை விதித்து உள்ளார். சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.