செவ்வாய், 18 டிசம்பர், 2018

மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் குறைதீர் மனு அளிப்பது எப்படி?






மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் ஆன்லைனில் குறைதீர் மனு அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://gdp.tn.gov.in/

2. உள்ளே சென்றதும் Online Petitions Indian Citizens என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. உடன் தோன்றும் பெட்டியில் உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து கேப்சாவை உள்ளிட்டு Generate OTP பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு Sign In பட்டனை அழுத்துங்கள்.

5. உடன் தோன்றும் பக்கத்தில் Petition Related Details பகுதியில் நீங்கள் எந்த மாவட்டத்தில் எந்தப் பகுதியில் என்னக் குறையை தெரிவிக்க விரும்புகிறீர்களோ அதன் விவரங்களை Petition Type, Department, Processing level, Main category, Sub category, District, Block, Village Panchayat, Petition Detail என்று முழுமையாக உள்ளிடுங்கள்.

6. அடுத்து Communication Details பகுதியில் குறைதீர் மனு அளிக்கும் மனுதாரரின் பெயர், பாலினம், தந்தை பெயர், ஆதார் எண், இமெயில் முகவரி, வீட்டு எண், தெரு, ஊர், மாவட்டம், வட்டம் போன்ற விவரங்களை உள்ளிடுங்கள்.

7. தற்போது Save பட்டனை அழுத்துங்கள். உங்கள் மனுவிற்கான ரசீது வரும். பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.