வியாழன், 28 பிப்ரவரி, 2019

*12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ~ அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்*

*அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்:*
 *12.ஆம் வகுப்பு பொதுத்தேர்வு*

8.45am
மணிக்கு ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்.

9.30 - 9.40am வினாத்தாள் பெற்றுக் கொள்ளுதல்.

9.45am
( *முதல் மணி* ஒரு முறை அடிக்கப்படும்) நுழைவு சீட்டினை சரிபார்ப்பு.

9.50am
 சிறப்பு அறிவிப்புகள் வழங்குதல்.

9.55am
 ( *இரண்டாவது மணி* இரண்டு முறை அடிக்கப்படும்) வினாத்தாள் கட்டினை பிரித்தல் - மாணவர்களுக்கு முன்பு.

10.00am
( *மூன்றாவது மணி* மூன்று முறை அடிக்கப்படும்)  வினாத்தாள் வழங்குதல்.

10.10am
( *நான்காவது மணி* நான்கு முறை அடிக்கப்படும்) விடைத்தாள் வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் மற்றும் கையொப்பம் இடுவது.

10.15am
( *ஐந்தாவது மணி* ஐந்து முறை அடிக்கப்படும்) தேர்வு எழுதலாம் என அறிவித்தல்.

10.45am/11.15am/11.45am/ மற்றும் 12.15pm
 (ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மணி அடிக்கப்படும்).

12.40pm
 *எச்சரிக்கை மணி* அடிக்கப்படும் அப்போது தேர்வர்களுக்கு வெள்ளை நூல் கொண்டு கட்ட அறிவுறுத்தல்.

12.45pm
long bell  விடைத்தாள் சேகரித்தல்.

🌷TET 2019 ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை












மார்ச் 2019 நாள்காட்டி


100 சதவீத மானிய தொகை பெற உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் ~ தோட்டக்கலை துறை தகவல்...

இந்திய மிலிட்டரி கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு...

நேர்மையான பரிவர்த்தனைகள் ~ தூய்மையான பொருளாதாரம்…

EMIS - இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பள்ளி மற்றும் ஆசிரியர்களின் தரவுகளை கூர்ந்தாய்வு செய்தல் - சார்பு...

EMIS - பள்ளி தகவல் தொகுப்பு பணிமனை - மாநில அளவிலான பயிற்சிக்கு கருத்தாளர்களை விடுவித்தல் - சார்பு...

புதன், 27 பிப்ரவரி, 2019

தொடக்கக்கல்வி - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செயல்வழிக்கற்றல் கற்பித்தல் முறையும், 4ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையினையும் பின்பற்றுவது தொடர்பான தெளிவுரைகள் வழங்குதல் ~ சார்பாக…

நாட்டுப்புறக் கலைஞர்கள் இசைக்கருவி பெற விண்ணப்பிக்க அழைப்பு...

2,336 கி.மீ வேகத்தில் பாயும் மிராஜ்...

10th ,+1 & +2 Exam Time Table...

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

What Next In Education...

9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்...

வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது.

தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது. அப்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாட திட்டம் மற்றும் தொடர் செயல்முறை திறன் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 

இதன்படி, காலாண்டு வரையில், முதல் பருவம்; அரையாண்டில், இரண்டாம் பருவம் மற்றும் ஆண்டு இறுதியில், மூன்றாம் பருவத்துக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு பருவத்துக்கான தேர்வை எழுதிய பின், அந்த பாட புத்தகங்களை, மீண்டும் மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அடுத்த பருவத்துக்கான பாடங்களை மட்டும் படித்து, தேர்வு எழுதினால் போதும். இந்த முப்பருவ முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை படிப்போருக்கு, 10ம் வகுப்பில், ஆண்டு முழுவதுக்குமான பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும், அரசு பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெறவும் திணறும் நிலை உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, ஒன்பதாம் வகுப்புக்கான, முப்பருவ பாட முறையை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. 

இதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மூன்று பருவ புத்தகங்களுக்கு பதில், ஒவ்வொரு பாடத்திற்கும், ஆண்டு முழுவதற்குமான ஒரே புத்தகத்தை தயார் செய்துள்ளது.எனவே, வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

EMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எளிதில் நினைவு கொள்ள...

First Two digits ~ 22 or 11

Next 8 digits your DOB

Next digit-1 for male , 2 for female staff

Remaining 6 digits-Unique number.

கடைசி 6 இலக்கங்கள் அந்த பள்ளி ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியாக வருவதைக் காணலாம்.

மாறுதல்/பதவி உயர்வில் வந்தவர்களைத் தவிர ஏனையோருக்கு இது பொருந்தும்.

பள்ளிக்கல்வி - போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் - 10.03.2019 ல் நடைபெறுதல் - அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக...

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ~ ஏப்.15ம் தேதி கடைசிநாள்…

2022 முதல் சேவையை தொடங்கும் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்ட தேசிய போட்டி...

விமான நிறுவனங்களை போல் தொடர் பயணத்துக்கு பிஎன்ஆர் எண்களை வழங்குகிறது ரயில்வே...

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ~ இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ~பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாடுதல் (School Annual Day Celebrations) ~ சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல் - சார்பு…

பள்ளிக் கல்வி - குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு மையம் (Child Rights and Protection Centre) - குழுக்கள் ஏற்படுத்துதல் - சார்பு...

Income Tax Department TDS சம்பந்தமாக சம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுரை... ( FY 2018-2019, AY 2019-2020)

1. இதில் பணியாளர்களுக்கு மாதாமாதம் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்தல்.

2. TDS முக்கியமான சில குறிப்புகள்.

3. Important of  PAN & TAN.

4. TDS  பதிவு செய்யாத போது ஏற்படும் தண்டத்தொகை.

5. Form 16 A &B வழங்குதல் சார்ந்து.

6. 24Q. எப்போதெல்லாம் காலாண்டுகள் மற்றும் ஆண்டுவாரியாக பதிவேற்றம் செய்யப்படும் என்ற தகவல்கள்.

7. செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கங்கள்.

8. உத்தேச வருமானம் அதற்கான வரி பிடித்தங்கள் சார்ந்து.

9. வரிவிலக்குப் பெற்ற சம்பளம் மற்றும் இதர விளக்குகள்.

10. இந்த ஆண்டிற்கான கழித்தல் செய்வதற்கான அளவீடுகள்.

11. பணியாளர்கள் தங்களதுபடிவத்தில்  வீடு வாடகை மற்றும் கூடுதலாக வரக்கூடிய வரவுகளை காண்பிக்கும் போது.

12. பணியாளர்கள் ரிட்டன்ஸ் செய்யும் காலம் அதற்கான தண்டத்தொகை.

யார் யார் பொருப்பு ?

*பள்ளிக்கல்வி பொருத்தவரை தொடக்கக் கல்வி ,அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு வட்டார கல்வி அலுவலரும்,

*அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களும்

*அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும்

*மற்றும் அதை சார்ந்த கல்வி அலுவலகங்களுக்கு அந்தந்த சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகளும் பொறுப்பு ஆவார்கள்...

Click here...

சனி, 23 பிப்ரவரி, 2019

10 STANDARD ~ THIRD REVISION TEST TIME TABLE FEB-2019…

ஆசிரியர் வருகைப்பதிவு ~ ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்...

1)Attendance app அப்டேட் செய்து கொள்ளவும்.

2)வலது ஓரத்தில் தெரியும் மூன்று கோடுகளை அழுத்தினால் வரக்கூடியவற்றுள் setting ஐ அழுத்தவும்.

3)setting ஐ அழுத்திய பின் வரும் log out ஐ அழுத்தவும். 

4)இப்போது இந்த attendance appஐ விட்டு விட்டு Google Chrome க்குச் சென்று Emis.tnschools.in. க்கு செல்லவும்.

5)இப்போது கேட்கப்படும் username,passwordல் உங்கள் பள்ளியின் Dise code,password ஐ பதிவு செய்யவும்.

6)உங்கள் பள்ளி open ஆனதும் ,வலது ஓரத்தில் இருக்கும் மூன்று கோடுகளை அழுத்தவும்.

7)இப்போது, staff ஐ அழுத்தவும் பிறகு staff details ஐ அழுத்தவும்.

8)இப்போது உங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பெயர் வரிசையாகக் காட்டப்படும்.

9)தலைமையாசிரியர் பெயரை அழுத்தவும்.

10)இப்போது தலைமையாசிரியரின் பெயருக்குக் கீழே உள்ள 17 இலக்க எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.

11)அங்கு தரப்பட்டுள்ள தலைமையாசிரியரின் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.

12)இப்போது,மீண்டும் உங்கள் மொபைலில் உள்ள attendance appஐ open செய்யவும். 

13)இப்போது கேட்கப்படும்,username கட்டத்தில் நீங்கள் குறித்து வைத்துள்ள 17 இலக்க எண்ணை பதிவிடவும்.

14)password கட்டத்தில்,குறித்து வைத்துள்ள த.ஆ மொபைல் எண்ணைப் பதிவிடவும்.

15)சற்று நேரத்தில்,attendance app open ஆகும்.அதில் teachers attendance பகுதியும் இருக்கும்.

16)teachers attendance ஐ அழுத்தி எந்த ஆசிரியரின் பெயரும் வரவில்லையெனில்
வலது ஓரத்தில் தெரியும் மூன்று கோடுகளை அழுத்தவும்.அதில் வரக்கூடிய settings ஐ அழுத்தி அதன் பின் காட்டக்கூடிய students data வை அழுத்தவும்.

17)இறுதியாக,கீழே தெரியும் Attendance sync ஐ அழுத்தி விடவும்.

18)இப்போது teachers attendance ஐ open செய்தால் அனைத்து ஆசிரியர்களின் பெயரும் காட்டப்படும்.

19)ஆசிரியர் பெயருக்கெதிரில் P என இருக்கும். 

20)வராத ஆசிரியர்களுக்கு எதிரில் இருக்கும் P ஐ அழுத்தினால் ,P ,L,A
என காட்டப்படும்
(P for present
L for leave
A for absent)

21)ஆசிரியர் leave என அழுத்தினால் ,அதில் CL,ML,EL ,OD என கேட்கும் 
உரியதை அழுத்தவும்.
                  நன்றி...

தேர்தல் - வாக்காளர் பட்டியல் - 18 ~ 20 வயது இளம் வாக்காளர்கள் வாக்காளர்களாக பதிவு செய்தல் - சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் - வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளை திறந்து வைத்திருக்க கோருதல் - தொடர்பாக…

தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு~செய்தி வெளியீடு...

வியாழன், 21 பிப்ரவரி, 2019

**5, 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு ... அரசு பின்வாங்கியது ஏன்?**

*5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது என்ற அரசின் முடிவுக்குக் கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.*

*`இடை நிற்றல் இல்லாத நிலை ஏற்படுத்திட, எட்டாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடத்துவதில்லை' என்ற முறை இருந்துவருகிறது. இந்த நிலையில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த முனைந்தது தமிழக அரசு. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவை முடிவெடுக்கும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே பள்ளிக்கல்வித் துறை, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து விவரங்களையும் சேகரித்து, வினாத்தாள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.*

*`5 மற்றும் 8-ம் வகுப்பின் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், தமிழக அரசு  இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?' எனக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.*

*இதுகுறித்து முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான வசந்தி தேவியிடம் பேசினோம். ``5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது மிகவும் பிற்போக்குத்தனமானது; இது ஏழைக் குழந்தைகளுக்கும், பொதுக்கல்விக்கும் எதிரானது. கல்வியில் மாற்றம் கொண்டு வருகிறேன் எனப் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்துவது, ஏழை குழந்தைகளுக்குக் கிடைத்து வரும் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவது போன்றது. அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலவச கட்டாய கல்வி சட்டத்துக்கு இது முரணானதும் கூட.*

*தொடக்கக்கல்வியில் பொதுத்தேர்வு என்று புனல்கொண்டு வடிகட்ட நினைத்தால், ஏழை  குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகும். இதனால், பெரும் நிறுவனங்களுக்குக் குறைந்த ஊழியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற சூட்சமம் அடங்கி இருப்பதையும் கவனிக்க வேண்டும். பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதபோது, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்தும் சூழலும் ஏற்படும். குழந்தைத் திருமணத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.*

*ஒருமுறை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. தொடக்கக் கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்குத் தகுந்த முறையில் கற்றுக்கொடுப்பதற்கு வசதியில்லை என்றுதான் அர்த்தம். பள்ளிகளில் தகுந்த வசதி ஏற்படுத்தாதது அரசின் தோல்வியே'' என்றார்.*

*கல்வியாளர் ராஜகோபாலன், ``தொடக்கக்கல்வியில் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார்கள். ஆரம்பக் கல்வி வகுப்புகளில் பொதுத்தேர்வு வைப்பது மழலைகளிடையே தேர்வு பயத்தையே உருவாக்கும். பொதுத்தேர்வில் தோல்வி அடைய வைப்பது அவர்களிடையே வன்முறை குணத்தையே உருவாக்கும்" என்றார்.*

*மாநில பொதுக்கல்வி மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ``பொதுத்தேர்வுகளால் மாணவர்களின் திறமையை மேம்படுத்த முடியாது. கற்பித்தலைச் சிறப்பான முறையில் மேற்கொள்வதன் மூலமே மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்ற முடியும். ஆரம்ப கல்விக்கான போதுமான கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் இல்லாத சூழ்நிலையில், தரத்தை மேம்படுத்துவதற்காகப் பொதுத்தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை" என்றார்.*

*தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், ``மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் 5 பொதுத்தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இது மாணவர்கள் மன அமைதியைக் குலைக்கும். கடந்த ஆண்டு  11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை குறைந்திருக்கிறது. கல்வி முறையைத் தகுந்த முறைக்கு மாற்றியமைக்காமல் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்துவதில் நியாயமில்லை" என்றார்.*

*அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து, "இந்த ஆண்டு 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது" எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தற்காலிகமாக இந்தப் பொதுத் தேர்வைத் தள்ளிவைத்திருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை மீண்டும் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி நெருக்கடி கொடுக்கப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.*

மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணிக்கு நேர்காணல்~22ம் தேதி தொடக்கம்…

நாமக்கல் பகுதியில் பகல் வெப்ப அளவு உயரும் ~ வானிலை மையம் தகவல்...

குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

தமிழ்த்தாயே!ஊழித்தாண்டவம் ஆடுவாயாக!!

வரித்திட்டம்,
மின் திட்டம்,
நீட்த்தேர்வு 
என்பனவற்றையெல்லாம் 
மத்தியரசு
மாநில அரசுகளின் வழியிலேயே மாநிலங்களில் நடைமுறைப்படுத்திட 
இசைவு பெறும் என்று அறிந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு ,
எட்டாம்வகுப்பு  பொதுத்தேர்வு போன்றனவற்றில் மாநில அரசுகள் வழியில் இல்லாமலேயே துறையின் இயக்குநர்கள்,
மாவட்ட சிஇஓக்கள் போன்ற அலுவலர்களின் வழியிலேயே நடைமுறைப்படுத்திட எத்தனிப்பது 
மாநில உரிமைக்கு,
மாநிலத்தின் கல்வி உரிமைக்கு,
மாநில சுய ஆட்சி உரிமைக்கு விடப்பட்டுள்ள சவலாக கருத இடமில்லை என்றாலும்,
பங்கம் விளைவிக்கிறது என்றே ஆழ்மனம் கவலைகொள்கிறது.

பெரிதும் சிலாகித்து சட்டமன்றத்திலேயே பாராட்டுப்பெற்ற  முப்பருவ பாடமுறை சத்தமின்றி கொல்லப்படுகிறது.

தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு முறை இயற்கை மரணம் நோக்கி தள்ளப்படுகிறது.

எளிய செயல்வழி மற்றும் எளிய படைப்பாற்றல் வழி கல்விமுறைகளின் வழியிலான தேர்வு முறைகள் கைவிடப்படுகிறது.

சுமையின்றி கற்றல் என்பது தூரதேசத்து கதையாகிறது.

1 - 14 வயது குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்பது தமிழ்நிலத்தில்  கட்டணக்கல்வியாகிறது.
 
தாய்மொழி வழிக்கல்வியின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கிறது.

ஏகலைவன்களின் தேசமாக தமிழ்தேசம் பின்னுக்கு தள்ளப்படும் சதித்திட்டமாகிறது.

குலக்கல்வி முறைக்கு சத்தமின்றி 
தமிழ் சமூகம் தள்ளப்படுகிறது.

கல்வி சிறந்த தமிழகம் என்பார் மகாகவி பாரதி.
கல்வி சிதைந்த தமிழகமாக சிதைக்கப்படுகிறது.

நெஞ்சம்  பதறுகிறது.
குடல் குலையெல்லாம் அதிர்கிறது.
உடலெல்லாம் நடுங்குகிறது.
சத்தமின்றி,
பொது விவாதம் இன்றி,
ஒருமித்த கருத்தொற்றுமை இன்றி
பொதுத் தேர்வு 
என்று சுற்றறிக்கை வெளியாவது
 நாகரீக சமுதாயத்தில் தான் இப்படி எல்லாம் நடக்கும்(!?); சாத்தியமாகும் போல் என்ற விரக்தி பீடிக்கிறது.

மாதச்சம்பளம் தேவை என்ற குடும்பநிலைக்காக 
எத்தனை ..
எத்தனை ...
பாவங்களை எல்லாம் கல்வியில்  செய்வது?!

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு துரோகம் இழைப்பது?!

அய்யகோ! 
தமிழ் நிலமே!
நீ பிளப்பாயாக!என்னைப் புதைத்துக்கொள்வாயாக!
 சிலப்பதிகாரத்து பூதங்களை அவிழ்த்து விடுவாயாக!
கண்ணகியின் அறச்சீற்றத்தை எல்லோருக்கும்  ஊட்டுவாயாக!
அறமே வெல்லட்டும்
குழந்தைகள் நலம் காக்கட்டும்
-முருகசெல்வராசன்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் - வரவினங்கள் மற்றும் செலவினங்கள் ஒத்திசைவு செய்வது தொடர்பாக அறிவுரைகள்...

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய, ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக!

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தலைவிரித்தாடும் இலஞ்ச-இலாவண்ய,
ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடுக! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்டக்கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனடிப்படையிலேயே கையூட்டு ஒழிப்பின்  ஒருபகுதியாகவே  திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது உரிய விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு  தொடக்கக்கல்வி இயக்குநரிடம் ஆசிரியர் மன்றம் எதிர்நோக்குகிறது. சட்டத்தின் ஆட்சி் நிலைநிறுத்தப்படும் என்று விண்ணப்பம் படைக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் 16 இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையப்பணிகளிலிருந்து விடுவித்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் மீளப்பணியமர்த்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள்...