வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்றமுன்னோடிகள் என 38 மறவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். வேலைநிறுத்தப்போராட்டத்தில் 30.01.19 முடிய பங்கேற்று நாளதுவரை( 31.01.19) பணியமர்வு ஆணைக்கு 13 மறவர்கள் காத்திருக்கின்றனர்...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில தலைமைநிலையச்செயலாளர்திரு.பெ.பழனிசாமி உள்ளிட்டு மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்றமுன்னோடிகள் 
என  38  மறவர்கள் 
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

வேலைநிறுத்தப்போராட்டத்தில் 30.01.19 முடிய பங்கேற்று நாளதுவரை
( 31.01.19)பணியமர்வு ஆணைக்கு 13 மறவர்கள்  காத்திருக்கின்றனர். 

மேற்கண்ட  பெருமைக்கும்,
தியாகத்திற்கும் சொந்தம் கொண்டாடும் உரிமை உடைய அமைப்பு ஆசிரியர் மன்றம் ஆகும்.

தொண்டால் ,
கடமையால்,
நல்பணியால்
சேவையால் வணக்கத்துக்குரிய,போற்றுதலுக்குரிய,பாராட்டுக்குரிய ஆசிரியர்மன்றத்தின்  உறுப்பினர்,பொறுப்பாளர் என்ற முறையில் கர்வம் பிறக்கிறது;சங்க கடமை முன்னை விடவும் மேலும் வலுவாய் மனதில் நிறைகிறது.

இத்தகு பெருமைமிகு தியாகசீலர்கள் நிறைந்த ஆசிரியர்மன்றத்தை மேன்மேலும் பலப்படுத்துவோம்;
வலுப்படுத்துவோம்.
உயர்த்துவோம்.

கன்னித்தமிழ் வளர...
கல்வித் தரமுயர...
கணக்காயர் நிலை மேம்பாடு பெற்றிட...
ஆசிரியர் மன்றம் காப்பீர்!வளர்ப்பீர்!!உயர்வீர்!!!
               
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக