ஞாயிறு, 31 மார்ச், 2019

*பான்கார்டுடன் ஆதார் இணைப்புக்கு அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு*

*🌷பான் கார்டுடன் ஆதார் இணைப்புக்கு அவகாசம் செப். 30 வரை நீட்டிப்பு*


*🌷ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில் அதனை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது*


*🌷மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க முதலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின், மார்ச் 31, 2019 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.இதன்படி இன்றுடன் (மார்ச் 31, 2019) முடிகிறது*


 *🌷இந்நிலையில் இன்று நேரடி வரி வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காலக்கெடு செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருப்பது கட்டாயம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது*



*🌷ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும். இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு* *தாக்கல் செய்யமுடியாது*


*🌷வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்*


*🌷இதனைத் தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்துவிடுவது நல்லது. கடந்த ஆண்டு மட்டும் 11.44 லட்சம் பான் கார்டுகள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன*


*🌷கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது*


*🌷இணைக்கவும் சரிபார்க்கவும்*


*🌷பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வருமானவரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று Link Aadhaar பக்கத்துக்குச் செல்லவும்*


*🌷ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும்*

சனி, 30 மார்ச், 2019

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.

பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணிநியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில்கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரைதமிழ்கத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலானTET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுதஅனுமதிக்கப்பட்டனர். அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில்குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டுONLINE வழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஆனால்இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர்50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதியவிதிமுறை வகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதிமுறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வு எழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கானமாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்டமாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளைமுன்வைக்கிறோம். கோரிக்கைகள்

 1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்தபட்ச மதிப்பெண்கள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / ST பிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேரமுடியும். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்றுTET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கெனதனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பதுசரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது.

2. TRBன்இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44% மதிப்பெண்கள் வரை பெற்றுB.Ed பட்டம் பெற்ற M. BC மாணவர்களும்; 40-44 % மதிப்பெண்கள் வரைபெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுதமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் B.ED பட்டப்படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.

 3. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் B.ED., பட்டப் படிப்பில் சேர UG ல் குறைந்தபட்ச ம் 40 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ்பெற்ற தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப் படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டகல்வியியில் கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இத்தகு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்அதிகம் ஆகும். கடந்த TET தேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றுப் பணிநியமனமும் பெற்றுள்ளனர்.

 4. தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப் படிப்பில் UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் பயின்றுவருகின்றனர். TET தேர்வை UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள்எழுத முடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பதுமுரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வுவாரியமும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம்பெற்ற தமிழக மாணவர்கள் அனைவரையும் TET தேர்வு எழுதஅனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்றபல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். 

ஏப்ரல் - ஜூன் காலாண்டு சிறுசேமிப்பு வட்டியில் மாற்றம் கிடையாது...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு முழுமையாக செலுத்த நடவடிக்கை வேண்டும் ~ தேர்தல் ஆணையரிடம் ஜாக்டோ-ஜியோ மனு...

உங்கள் வாக்கு சாவடி வாக்காளர் பட்டியல் PDF வடிவில்...

ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு...

👆தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிப்பதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால், இந்த மடங்கு சில கோடிகளை தாண்டும்.

👆அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் காலத்தில், வாழ்வாதாரத்தை காக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன் போராடினர்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு ஆர்வம் காட்டாததுடன், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சம்பளத்திற்கு போய் விடுவதாக முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிருப்தி:

👆இது, அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சை அவரது கட்சியினரே வெளியிட்டது தான் 'ஹைலைட்!' உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டு அமைப்பான 'ஜாக்டோ - ஜியோ'வினர், வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர். ஆனாலும், பழனிசாமி அரசு மீதான அவர்களின் அதிருப்தி தொடர்கிறது. அரசு ஊழியர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற ஆளுங்கட்சியினர் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. இதனால், கடுப்பான அரசு ஊழியர்கள் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல் 18ல் ஒரு விரல் புரட்சி மூலம் ஆட்சியாளருக்கு கசப்பு மருந்து தர வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

👆இது குறித்து, சமூக வலைதளங்களில் கணவர், மனைவி, மகன், மகள், மருமகன், 18 வயது நிரம்பிய பேரன், பேத்தி, மாமன், மச்சான், சம்மந்தி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, தம்பி மனைவி என உறவினர்களிடம் பேசுங்கள் என்ற அழைப்புடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பரப்பும் செய்தியில் இடம் பெற்றுள்ளது...

👆வேலையிழப்பு தடை சட்டம் அரசு வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 56, காணாமல் போன ஓய்வூதியத்திற்கு பிடித்தம் செய்த தொகை, ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியம் இல்லாத நிலை, பதவிகள் மட்டுமின்றி பணிமாறுதல்களுக்கு கூட லட்சக்கணக்கில் லஞ்சம், உரிமைக்காக போராடியவர்கள் மீது அடக்குமுறை, பெண்கள் என்றும் பாராமல் இரவு, 11:00 மணி வரை மண்டபங்களில் அடைத்து வைத்து அலைக்கழிப்பு செய்தது.

👆அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல், பெண் ஊழியர்கள் தவித்தது, வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும், புதிய பணியிடத்திற்கு மாறுதல் தந்தது.ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வது, சம்பள உயர்வுக்கான நிலுவைத்தொகை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.
ஜாக்டோ - ஜியோவின் உண்மையான ஒரு விரல் புரட்சியில் உங்கள் சொந்தங்கள் அனைவரையும் இணையுங்கள். மாற்றம் ஏற்பட ஓட்டுப்பதிவு அதிகம் அவசியம். தேர்தலில் ஒரு விரல் மை புரட்சி மூலம் ஆளுவோருக்கு நாம் தருவோம் கசப்பு மருந்து. அதுவே நமக்கு ஏற்பட்ட மணப்புண்ணுக்கு மருந்தாக அமையும்.

👆ஆம், அன்று பகை முடிக்க பாஞ்சாலி, 'எரிதழல் கொண்டு வா' என, வீரமுழக்கமிட்டாள். நவீன பாஞ்சாலியாக மாறுங்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு, மை மூலம் எச்சரிக்கை விடுவோம். இதில், நம் சொந்தங்களையும் சேர்த்து கொள்வோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாக்டோ -ஜியோ ~ தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 விழுக்காடு வாக்குப்பதிவினை எய்துவது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய கடிதம்...



வெள்ளி, 29 மார்ச், 2019

Get information about your Court case anytime, anywhere using 2 easy ways...

1. Download eCourts Services Mobile App.

2. Visit eCourts portal: ecourts.gov.in

எதிர்வரும் 13.04.19 (சனி)க்குள் 210 வேலைநாள்கள் நிறைவு செய்யப்படவில்லையெனில், அதற்காக அரசுவிடுமுறை நாள்களில் பள்ளியை செயல்படுத்திட முயற்சிக்காதீர்!.

அன்பானவர்களே!வணக்கம்.

எதிர்வரும் 13.04.19
(சனி)க்குள் 210  வேலைநாள்கள் நிறைவு செய்யப்படவில்லை
யெனில்,அதற்காக அரசுவிடுமுறை நாள்களில் பள்ளியை
செயல்படுத்திட
முயற்சிக்காதீர்!.

கடந்த காலங்களைப்போன்று வேலைநாள்கள் குறைவினை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி  தவிர்ப்பு பெற்று 13.04.19க்கு பிந்தைய வேலைநாளில் அதாவது அரசு விடுமுறை இல்லாத நாள்களில்  பள்ளிகளை 
நடத்திடுவதற்கு வட்டாரக்கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதுவீர்!
ஏப்ரல்30க்குள்
210நாள்கள் நிறைவு செய்வீர்!  
அனுமதி் முறையாகப் பெற்று 210
நாள்கள் நிறைவு செய்வீர்!.

வேலைநாள் குறைவு ஏற்படின் கவலைக்கொள்ளாதீர்!. கடந்த காலங்களில் எவ்வாறு அனுமதி பெற்று பள்ளியை நடத்தி வேலைநாள் குறைவு ஈடுசெய்யப்பட்டதோ ,
அதேமுறையில்,அதே வழியில் செயல்படுவீர்!.
Take it easy;don't worry

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்.,
நாமக்கல் மாவட்டம்(கிளை).

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு படங்கள்








தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - நாமக்கல் மாவட்டம் (கிளை) - மாவட்டச் சிறப்பு பொதுக்குழுக்கூட்ட அழைப்பிதழ் (31.03.2019 - திருச்செங்கோடு)


2019 General Elections to Lok Sabha and Bye-Election to Assembly Constituency of Tamil Naldu 2019 - Issue of postal ballot papers - ( நெறிமுறைகள்) Instructions-Regarding.


















நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ~ தொடக்கக் கல்வி-கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)- பள்ளிகள்(Profile), ஆசிரியர்கள் (Teacher profile), மற்றும் மாணவர்களின் தகவல் தொகுப்பு (Student profile) விவரங்களை விடுதல் மற்றும் தவறுகளின்றி உள்ளீடு செய்து முடித்தல்-சார்பாக...

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் தயாரித்து வழங்குதல் - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுமதி அளித்தல் - மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றுப் பணியில் பணிபுரிய பணி விடுவிப்பு - சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..













இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு - NCTE பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு தொடங்கியுள்ள மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு...

தமிழக அரசு பரிந்துரை தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏப். 2-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வியாழன், 28 மார்ச், 2019

12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் ? - பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டி புதிய பாடத்திட்டத்தில் வெளியீடு



RTE-குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் - 2019-2020 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திட பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பாக.




G.O Ms.No. 98 Dt: March 07, 2019 PENSION – Re employment - Fixation of pay of re employed pensioners – Enhancement of ignorable part of pension from Rs.4,000/- to Rs.15,000/- in the case of Commissioned Service Officers and Civil Officers holding Group A posts who retire before attaining the age of 55 years - Orders -