திங்கள், 29 ஏப்ரல், 2019

பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் ~ தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்…

பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டும் உயர் கல்வியில் சேர்க்கை ~ கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு...

10th MARCH 2019 Result Links

10th MARCH 2019 RESULT - Student & School Level Links

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

90 நிமிடங்களா? 45 நிமிடங்களா? தொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம்...

முட்டிபோட வைத்தல், கிள்ளுதல், அறைதல் நடைபெறக்கூடாது , மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்த கூடாது ~ தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு…

நாமக்கல் - புதுச்சத்திரம் ஒன்றியம் , களங்காணி சமுதாய நலக்கூடத்தில் 29.04.19 (திங்கள்) பிற்பகல் 03.00் மணியளவில் வாசிப்பு முகாம் ~ இம்முகாமில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் பங்கேற்குமாறும், முகாமின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து உதவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்...

அன்பானவர்களே!வணக்கம்.

நாமக்கல் -  புதுச்சத்திரம் ஒன்றியம்,
களங்காணி 
சமுதாய நலக்கூடத்தில் 29.04.19(திங்கள்)
பிற்பகல் 03.00் மணியளவில்  வாசிப்பு முகாம்  தொடங்குகிறது.

கடந்தாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) ஐசிடி(ICT)முகாம்கள்  நடைபெற்றதை அறிவீர்.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில்  மாணாக்கர்களின் பல்திறன்களை வெளிக்கொணரும் வகையிலான முகாம்கள்
தொடங்குகிறது. 

வகுப்பறை சனநாயகத்தன்மை கொண்டதாக,
மகிழ்வும்,இனிமையும் நிறைந்தாக,
சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக அமைந்திடுவது சார்ந்தும் கலந்துரையாடல்கள் நடைபெறுகிறது.
 
இன்றைய அக,புறச்சூழல்களின் தேவையை யொட்டி முகாம் வடிவமைக்கப்பட வேண்டி உள்ளது.தொடர்ந்து 
நடைபெறவும் வேண்டியும் உள்ளது.

இம்முகாமின் உள்ளார்ந்த நோக்கம் நிறைவேறிடும்
வகையில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்தமாநில,மாவட்ட,
ஒன்றியப் பொறுப்பாளர்கள் இம்முகாமில் பங்கேற்குமாறும்,
முகாமின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து உதவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன.
                           நன்றி.
           ~முருகசெல்வராசன்.

இ.பிஎப் வட்டி 8.65% ~ மத்திய அரசு ஒப்புதல்…

நீட் ஹால் டிக்கெட்டில் திருத்தம் ~ பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு…

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

பூமியில் நிலநடுக்கம் போன்று செவ்வாயிலும் நிலநடுக்கம்...

மாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் இன்ஜி. கவுன்சலிங்கில் பங்கேற்க உதவி மையங்கள் அமைப்பு ~ தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்…

*ஜிப்மரில் நர்சிங்,துணை மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வினியோகம்*

*🌷ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வு விண்ணப்பம் வினியோகம்*

*ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி. நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு தனி நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, சேர்க்கை நடக்கிறது. அதுபோல், இக்கல்லுாரியில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கும் ஆன்லைன் நுழைவு தேர்வு நடத்தி, சேர்க்கை நடக்கிறது.இந்தாண்டிற்கான நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கியது.*

*ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 75 இடங்களும், பி.ஏ.எஸ்.எல்.பி., பாட பிரிவில் 4 இடங்கள் உள்ளன.பி.எஸ்.சி., மயக்க மருந்து டெக்னாலஜி, கார்டியோ லேபரட்டரி டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரத்த வங்கி டெக்னாலஜி, ரேடியோ டைகனாஸ்டிக் டெக்னாலஜி, நியூரோ டெக்னாலஜி, நியூக்லியர் மெடிசன் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி, பெர்ப்ஷன் டெக்னாலஜி, ரெடியோதெரபி டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 4 இடங்கள் உள்ளன. எம்.எல்.டி. பாடப்பிரிவில் 30 இடங்கள், கிளினிக்கல் நியூட்ரிஷன் பாடப்பிரிவில் 4 சீட்கள் உள்ளன. மொத்தமுள்ள 153 இடங்களில், நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.www.jipmer.edu.in என்ற இணையளத்தில், மே 24ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.*

*விண்ணப்ப கட்டணமாக அகில இந்திய மற்றும் புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓ.பி.சி. மாணவர்களுக்கு ரூ.1500, எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.1200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.ஆன்லைன் நுழைவு தேர்வு, ஜூன் 22ம் தேதி, காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை ஒரே ஷிப்டில் நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை, ஜூன் 10ம் தேதி முதல் 22ம் தேதி காலை 8:00 மணி வரை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.*
*நுழைவு தேர்வு முடிவு, ஜூலை 5ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது.விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா எண் 18002667072 மற்றும் ஜிப்மர் அகாடமிக் பிரிவு 0413-2298288, 2272380 என்ற தொலைபேசியில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

வாசிப்பு முகாம் ~ மன்றக் கல்விக்குழு...

வாசிப்போடு சுவாசிப்போம்...

(வாசிக்க 
ஒரு முகாம்~
ஆசிரியருக்கும்,மாணாக்கருக்கும்)

நிகழ்விடம்:

சமுதாயக்கூடம்,
மாரியம்மன் கோவில்
எதிரில்,
களங்காணி.

நாள்:

29.04.19(திங்கள்)

நேரம்:

பிற்பகல் 03:00 - 06.10 மணி

நிகழ்வுகள்:

அ)
03:00 மணி:
முகாம் 
நோக்க உரை

ஆ)
03:15 - 03:45 மணி: 
புத்தக  கலந்துரையாடல் (ஆசிரியர்களுக்கானது) 

இ)
03:50 -  05:05மணி
 புத்தக வாசிப்பு (மாணவர்களுக்கானது)

ஈ)
05:10 - 06.10மணி
வரைதலும்,
வண்ணமிடலும்.

வாசிப்பை நேசிப்போம்; சுவாசிப்போம்...

எல்லோரும் முகாமுக்கு
வரலாம் 
வாங்க... 
அன்போடு அழைக்கிறது...
                           ~ மன்றக்
                          கல்விக்குழு.

பேசிட:
7904505628,
9003628116

ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு தனித்தேர்வர்கள் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்...

தோட்டக்கலை துறை சார்பில் கோடைகால பயிற்சி முகாம்...

வடை, பஜ்ஜியை பேப்பரில் வைத்து உண்பதால் கேன்சர் ஏற்படும் ~ மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…

காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும் ~ தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு…

வியாழன், 25 ஏப்ரல், 2019

GPF -Rate of interest - Financial Year 2019-2020



பிஇ, பிடெக் படிப்புகளுக்கு மதிப்பெண் எவ்வளவு? ~ தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு…

மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கும்...

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ~ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

புதன், 24 ஏப்ரல், 2019

பள்ளிக் கல்வி - அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-2020 கல்வியாண்டு முதல், பள்ளி மாணாக்கர் மற்றும் ஆசிரியர் சார்ந்து மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தின் (EMIS web portal) மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - 2019-2020 மாணவர் சேர்க்கை / தேர்ச்சி / வேறுபள்ளிக்கு மாற்றம் / நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வது -சார்பாக...

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வுகள், மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் - திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் - சார்பு...



நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே! இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்கிடுக! சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக! ஒன்றியத்திற்கு, ஒன்றியத்திற்கு வேறுபடும், மாறுபடும் அன்றாட அலுவலக நிர்வாகநடைமுறைச் செயல்பாடுகளை முறைப்படுத்திடுக! ~ஆசிரியர் மன்றம் கோருகிறது.

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க ஆசிரியர் மன்றம் கோரிக்கை மனு


நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே! இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும் எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்க! ~ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது.

10ம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு ~ அட்டவணை வெளியீடு…

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவி மே 4ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம்~ TNPSC அறிவிப்பு…

EMIS இணைய தளத்தில் மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு PROMOTE வழங்கும் விளக்கம்...

EMIS இணைய தளத்தில் மாணவர்களுக்கு PROMOTE வழங்கும் போது தொடக்கப்பள்ளிகள் 5 ஆம் வகுப்பில் இருந்தும் , நடுநிலைப்பள்ளிகள் 8 ஆம் வகுப்பில் இருந்தும் உயர்நிலைப்பள்ளிகள் 10ம் வகுப்பிலிருந்தும் மேல்நிலைப்பள்ளிகள் 12ஆம் வகுப்பிலிருந்தும்
PROMOTE வழங்க ஆரம்பிக்கவும்

(முதல் வகுப்பில் இருந்து துவங்கினால் முதல் வகுப்பில் promote செய்யப்பட்ட மாணவர்கள் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பட்டியலில் கலந்து விடுகிறார்கள்)

துவக்கப்பள்ளிகள் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ,நடுநிலைப்பள்ளிகள் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், உயர்நிலைப்பள்ளிகள் 10ஆம் வகுப்பு  மாணவர்களுக்கும்,மேல்நிலைப்பள்ளிகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் move to common pool தேர்வை தெரிவு செய்யவும்.

மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யும் முன்பாக கவனிக்க வேண்டியவை:

1.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கையும் PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும்.

 2.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கை PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் class &sections பகுதிக்கு சென்று add class &section மூலம் புதிய பிரிவுகளை சேர்க்கவும்.

3.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கை PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் class &sections பகுதிக்கு சென்று மாணவர்கள் எண்ணிக்கை 0 உள்ள பிரிவுகளை Delete செய்யவும்.

Click here for video...

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு...

ஜூன் 20ல் இன்ஜினியரிங் கவுன்சலிங் ~ மே 2 முதல் விண்ணப்பிக்கலாம்…

திங்கள், 22 ஏப்ரல், 2019

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர் 112 ~ தமிழகத்தில் அமல்.....

இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 112 என்ற அவசர உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதில், தனிநபர் ஒருவருக்கு அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம். 

இதன் மூலம், போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் சேவைக்காக தொடங்கப்பட்ட இந்த எண்ணை வேடிக்கைக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

*பி.இ.,கலந்தாய்வு :ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது*

*🌷பி.இ., கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது*

*🌷பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🌷பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18 கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.*

*🌷இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்கு அருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர் சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சூரப்பா, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.*

*🌷உயர் கல்வித் துறைச் செயலர் உள்பட பலரின் கார்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பெட்ரோல் நிரப்பப்படுவதை ரத்து செய்தது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ரத்து செய்தது என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை சூரப்பா எடுத்தார். இது பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தனைச் சேர்த்தும், மேலும் சில அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தும் உயர் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.*

*🌷இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக 2019-20 கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.*

*🌷இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 31ம் தேதி கடைசி நாளாகும்.*

தொடங்கும் கோடை மழை ~ தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் ~ இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும் ~ பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு…

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு ஜூன் 14ல் தொடக்கம் ~ தனித்தேர்வர்கள் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு...

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு 23, 24ம்தேதி விண்ணப்பிக்கலாம் ~ பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வேளாண்துறை படிப்புக்கு ஜீலை 1ல் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

*வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு*

கோவை: வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, வரும், ஜூலை, 1ல் நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்டது. நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, ஆன்லை' மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், 700 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., - திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாய்.விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இ--மெயில்&' மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்; இவற்றின் வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன.ஆனால், தமிழக மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற மாநில மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவதாக, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் அவசியம் எழுத வேண்டும். மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம். நாடு முழுவதும், 75 வேளாண் பல்கலைகள் உள்ளன.பல்கலையின் மொத்த இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

வேளாண் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை, www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

+12 மாணவர்களுக்கு பயனுல்ல அரசு கல்லூரிகள் மற்றும் தூழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்




செவ்வாய், 16 ஏப்ரல், 2019

*தேர்தல் 2019 -எந்த வாக்குச்சாவடி என தெரிந்ததும் கீழ்க்கண்ட Link. மூலம் நீங்கள் பணியாற்றறப்போகும் இடத்தின் முழுதகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்*

தேர்தல் 2019 - எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும் கீழ்கண்ட link மூலம் நீங்கள் பணியாற்றப் போகும் இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம்.



Presiding officer order கிடைத்தவுடன்
எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும்
கீழ்கண்ட link மூலம்
நாம் பணியாற்றப்
போகும்

*வாக்குச் சாவடி அமைவிடம்
*மொத்த வாக்காளர்
*வாக்காளர் பட்டியல்
*திருத்தப் பட்ட பட்டியல்
*வாக்குச் சாவடி அமைவிடம்
*(Google map)

அனைத்தும் இந்த link ல் கிடைக்கப் பெறும்

பயன் பெறுங்கள் நண்பர்களே...

உங்கள் வாக்கு சாவடி வாக்காளர் பட்டியல் PDF வடிவில்

ஓட்டளித்தால் மட்டுமே அரசு ஊழியருக்கு சம்பளம்...

வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான குறிப்புகள்...




6 இன்ஜின் ஜம்போ விமானம் ...

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை...

என்வாக்கு விற்பனைக்கு அல்ல...

தமிழ்வழிக்கல்வி,
தமிழ்மொழி,
தமிழினம், 
தமிழ்தேசம்,
தமிழ்மரபு,
கலாச்சாரம்,
பண்பாடு,  பழக்கவழக்கம், அறங்கள்,
விழுமியம்,
இயற்கை
வளங்கள்,
தன்னாட்சி 
உரிமைகள் 
காக்கப்பட 
பணம் பெரிதல்ல...
மனமே பெரிது.
தன்மானமே
பெரிதினும்பெரிது.
மானம்?
சோறு?
எது வேண்டும் ?
தடியால் 
தட்டி எழுப்பிய தந்தைப்பெரியாரின் பூமியில் 
மானமே!
பெரிதென 
விதைப்பீர்!
பேசுவீர்!பரப்புவீர்!
பெருவாழ்வு வாழ்வீர்!
#என்வாக்கு விற்பனைக்கு அல்ல...

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு...

வாக்குச் சாவடி அலுவலர் 3 to 5 (PO 3,4,5)ன் கடமைகளும் பொறுப்புகளும்...

வாக்குச் சாவடி அலுவலர் 2 (PO 2)ன் கடமைகளும் பொறுப்புகளும்...

வாக்குச் சாவடி அலுவலர் 1 (PO 1)ன் கடமைகளும் பொறுப்புகளும்...

உரத் தொழிற்சாலையில் மார்க்கெட்டிங் ஆபீசர் பணி...