செவ்வாய், 21 மே, 2019

*தமிழக கல்வித்துறை தொலைக்காட்சி ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*

*🌷தமிழக கல்வித்துறை டிவி சேனலில் 55 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு: ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*

*🌷பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக ஒரு டிவி சேனல் (TAC TV) தொடங்குகிறது. இதையடுத்து 53 ஆயிரம்  பள்ளிகளுக்கு கல்வி சேனலின் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.*

 *🌷இந்த சேனலை மாணவர்கள் வீடுகளிலும் பார்க்க முடியும். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்காகவே புதிய டிவி தொடங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் கல்வித் தொடர்பான தகவல்கள், கல்வித்துறை நிபுணர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.*

*🌷இதன் ஒளிபரப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. இதை பொதுமக்களும் பாக்கலாம்.*

 *🌷இந்நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் என சுமார் 53 ஆயிரம் பள்ளிகளில் இந்த சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்பட உள்ளது.*

*🌷அதற்காக 55 ஆயிரம் பள்ளிகளில் புதியதாக டிவி பெட்டிகள் வாங்க வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள டிவி பெட்டிகளை சீர்செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.*

*🌷இதற்கான செலவுகளை அக்குமிலேஷன் நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதிகளில் இருந்து செலவிட வேண்டும். உள்ளூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூலம் பள்ளிகளில் இணைப்பு பெற வேண்டும்.*

 *🌷பள்ளிக் கல்விக்கான சேனல், அரசு  கேபிள் நிறுவன அலைவரிசை எண் 200ல் பார்க்க முடியும்.*

*🌷ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடங்கள், கல்வி தொடர்பான நிகழ்வுகள், ஒவ்வொரு பாடத்திலும் வல்லமை பெற்ற ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தி அதை ஒளிப்பரப்புவது என்று பல்வேறு நிகழ்வுகள் இந்த சேனலில் வர உள்ளன.*