சனி, 1 ஜூன், 2019

அங்கன்வாடி மைய மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்காதே!


அன்பானவர்களே!வணக்கம். 

அங்கன்வாடி மைய 
மழலையர் வகுப்புகளுக்கு 
இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி ,
முறையற்ற வகையில் 
அனுப்பி வைப்பதை
 முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின்
 நாமக்கல் மாவட்ட அமைப்பு , நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களின்  கோரிக்கைகள் சார்ந்து 
 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர், 
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,நாமக்கல், திருச்செங்கோடு 
கல்வி மாவட்டக்கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விண்ணப்பம் படைத்துள்ளது.

நாமக்கல் / திருச்செங்கோடு கல்வி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் ஆகியோரிடம்  
மாவட்டச்செயலாளர் திருமுருகசெல்வராசன்  
நேரில் சந்தித்து 
 முறையீடு செய்து உள்ளார். 
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் .திரு.க.மீ., அவர்கள்  இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பினைக் களைவது ,
கண்ணியம் காப்பது சார்ந்து தமிழக முதல்வரைச் சந்திப்பது,
 தமிழ்நாடு  அரசிடம் முறையிடுவது, ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் விவாதித்து முடிவாற்றுவது, 
தொடக்கநிலை ஆசிரியர் அமைப்புகள் இணைந்து செயல்படுவது குறித்து பேசுவது, 
உச்சநீதிமன்றத்தில்  வழக்காடுவது குறித்து முடிவெடுப்பது  போன்ற வகைகளில்  செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்பதை தெரிவித்து உள்ளார்கள்.
 
மேலும்,
தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்கள் எவரும்(இளையோர், மூத்தோர் என்று வித்தியாசப்படுத்திக்கொள்ளாமல்) எவ்விதத்திலும் கவலைக்கொள்ள வேண்டியதில்லை. 
எல்லாவிதமான பாதிப்புகளிலிருந்தும் 
நாம் நம் ஒற்றுமையால் ,
 தொடர் நடவடிக்கையால் வெல்வோம்!பாதிப்புகளிலிருந்து  
மீள்வோம்! தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்கள் நெஞ்சுரத்தோடு் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்! என்று தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாம்வெல்வோம்!
நாளை நமதே!    
                   நன்றி.
            -முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக