மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 3௦ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
அந்த கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜூலை 31 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதுபோல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் மாற்றம் செய்து காலை உணவுவழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் கூறினார்