ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத்தில் பல்லாண்டுகளாக பல லட்சக்கணக்கில் முறைகேடுகள் விரிவான விசாரணை தேவை_ஆசிரியர் மன்றம் கோரிக்கை

எருமப்பட்டி ஒன்றிய  ஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு  சிக்கன நாணய கடன் சங்கத்தில் பல்லாண்டுகளாக பல லட்சக்கணக்கில் முறைகேடுகள் நடந்துவருகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இதையெல்லாம் மூடிமறைத்து எதுவும் நடக்கவில்லை என்று ஆசிரியரை, பணியாளரை நம்ப வைப்பதற்கும்,
தவறிழைத்தவர்களை,
தவறுகளுக்கு  துணைபுரிபவர்களை காப்பாற்றுவதற்கும்  ஒரு தரப்பு அரசியல் அதிகாரத்தை , செல்வாக்கைக் கொண்டு கூட்டுறவுத்துறையின் மீது அழுத்தமும், நிர்பந்தமும், செலுத்துகிறது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.
இத்தகு தகவல்களால் ஒன்றியத்தில் பதட்டமும், கொந்தளிப்பும் காணப்படுகிறது. இத்தகு சூழ்நிலையில் தான்  எல்லாவிதமான அழுத்தங்களையும்  அலட்சியப்படுத்தி , புறந்தள்ளி விட்டு் செம்மையாக ஆய்வுசெய்து உண்மைத்தன்மையை வெளிக்கொணர்ந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுமாறும், தவறிழைத்தவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களிடம்  வேண்டுகிறது.