வியாழன், 26 செப்டம்பர், 2019

பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம் ~ புதிய ஆட்சியர் மெகராஜ் பேட்டி…

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மெகராஜ் பொறுபேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது. நாமக்கல் மாவட்ட மக்கள் உழைப்பாளர்கள் . அவர்கள் செயலே அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தி பணிகளை சிறப்பாக செய்ய உதாரணமாக இருக்கும் என்றார். நான் நெல்லை மாவட்டம், கூடங்குளம் ,விஜயாபதி சொந்த ஊர். நான் 2004 ம்  ஆண்டு நாமக்கல்லில் திட்ட அலுவலராக பணியாற்றி உள்ளேன். பிற மாவட்டங்களில் ஊராட்சி திட்ட இயக்குநராக 10 ஆண்டுகளும்,  ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநராக 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி பெற்று, வேலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து  இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக