வியாழன், 17 அக்டோபர், 2019

*அக்டோபர்-17,வரலாற்றில் இன்று*

*🌏அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று.*

*ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*இந்நாள் 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது.*

*இருந்தபோதிலும் உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17ஐ வறுமை ஒழிப்பு நாளாக  அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.*

*உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.*

*ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம்.*

*பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது.*

*இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள் தொடர்பான நிலையைக் குறிக்கின்றது.*