வெள்ளி, 18 அக்டோபர், 2019

*அக்டோபர் 18-வரலாற்றில் இன்று*

*🌷அக்டோபர் 18, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*சார்லஸ் பாபேஜ் நினைவு தினம் இன்று.*


*சார்லஸ் பாபேஜ் (Charles Babbage) பிரித்தானிய பல்துறையறிஞர்* *கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர்,* *பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர்* *என்று பல பரிமாணங்கள் கொண்டவர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.*
*1991இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.*

*சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்*

*புகையிரதத்தின் தைனமோ மீட்டர்*

*நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி*

*சீரான அஞ்சல் கட்டண முறை*

*கலங்கரை விளக்கு ஒளி*

*கீறிவிச் ரேகைக் குறியீடு*

*சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி*