செவ்வாய், 22 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 22, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
 *🌷எழுத்தாளர் அ.மாதவையா நினைவு தினம் இன்று.*

*மாதவையா பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்.*
*தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட  அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.*

*இவர் நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை மூன்று ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3ஆம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.*

*இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914இல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். அப்போட்டியில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவல், சிறுகதை தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.*

*சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே இவருடைய உயிர் பிரிந்தது. அப்போது இவருக்கு வயது 53.*