புதன், 23 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 23, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷மோல் நாள் இன்று.*

*மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.*