வியாழன், 24 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
*🌷உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.*

*போலியோ நோயை பூமியிலிருந்து வேறோடு ஒழிக்க சபதம் ஏற்போம்!*
*போலியோ நோய்க்கிருமிகள் மிக வேகமாக தொற்றும் தன்மையுடையவை.*

*இது நரம்புமண்டலத்தை பாதித்த சில மணி நேரத்தில், பக்கவாதத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நுண்கிருமி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே பாதிக்கும்.*

*போலியோ நுண்கிருமிகள் மலம் கலந்த தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் மூலமாக பரவுகின்றன. இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கை கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும்.*

*இந்நோய் வந்தால் அதனை குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது. இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதேயாகும். அவ்வாறு கொடுக்கும்போது போலியோ நோய் எதிர்ப்பு திறன் அனைத்து குழந்தைகளுக்கும் உருவாக்கப்படுகிறது.*