திங்கள், 11 நவம்பர், 2019

*🌷நவம்பர் 11,*
*வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*தேசிய கல்வி தினம் இன்று.*

-------------------------------------------------------
*இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.*

 *ஆசாத், இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார்.*

 *சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய  நடவடிக்கைகள் எடுத்தார்.*

*இந்திய தொழில்நுட்ப கழகத்தை(IIT) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும் இவரது பெரும் சாதனைகளில் சில.*

*இவரது சாதனைகளை நினைவுகூர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், இவரது பிறந்த நாளான நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.*