*🌷நவம்பர் 12,*
*வரலாற்றில் இன்று.*
*பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி பிறந்த தினம் இன்று.*
---------------------------------------------------------
இந்திய பறவையியல் வல்லுனரும், இயற்கையியல் ஆர்வலருமான சலீம் அலி 1896ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று மும்பையில் பிறந்தார். பறவைகளின் மீது இவருக்கிருந்த அன்பினால் பறவைகளின் பழக்க வழக்கங்களையும் அவற்றின் வாழ்கை முறைகளையும் கவனமாக ஆராய்ந்தார். இந்திய மலைப் பகுதிகளான பரத்பூர், மேற்கு தொடர்ச்சி மலைகள், இமய மலைத்தொடர்கள், தக்காண பீடபூமி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களிலும் பல்வேறு வகையான பறவை இனங்களை ஆய்வு செய்து The Hand Book on India Birds என்ற புகழ்வாய்ந்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும் இவருடைய The Fall of Sparrow என்ற புத்தகமும் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன், பிரிட்டிஷ் பறவையியல் கழகத்தின் விருது மற்றும் உலக இயற்கை பாதுகாப்பு கழகத்தின் ஜான் சி. ஃபிலிப்ஸ் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.