மாணாக்கர் எண்ணிக்கைக் குறைவினைக் காரணம்காட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வினை பறிப்பதா!?
அநீதியான நடவடிக்கைக்கு வன்மையாக கண்டனம்!
.........................................
தமிழ்நாட்டின் கல்வியைச் சீரழிக்கும் கொடூரமான நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்போம்!
தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு கடையனுக்கும் கல்வி எனும் அறப்பணியை தொய்வின்றி ,
தளர்வின்றி ஆற்றும் ஈராசிரியர் பள்ளிகளை அழித்தொழிக்கும் தமிழ்நாடு கல்வித்துறையின் நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிப்போம்!
ஈராசிரியர் பள்ளிகளை அதிகாரப்பூர்வமாக ஓராசிரியர் பள்ளிகளாக்கி தொடக்கக்கல்வியை அழித்தொழிக்கும் நிலைப்பாட்டை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துவோம்!
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான தேர்ந்தப்பட்டியலின் வரிசைஎண்ணில் வைக்கப்பட்டுள்ள பணிமூப்பு இடைநிலை ஆசிரியருக்கு மாணாக்கர்களின் எண்ணிக்கைக் குறைவினை காரணம்காட்டி பதவிஉயர்வினை பறிப்பதென்பதும்,
மறுப்பென்பதும் அநீதியான செயலாகும்!நியாயமற்ற நடவடிக்கையாகும்!அரசியல் சட்ட ரீதியான உரிமை பறிப்பாகும்!
பத்துக்குறைவான மாணாக்கர்கள்
கல்வி பயிலும் பள்ளிகளின்
தர மேம்பாட்டிற்கு குறுவளமையம் உருவாக்கி
மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியரின் மேற்பார்வையில் பள்ளிகளை மேம்படுத்துவோம் என்றுக்கூறிக்கொண்டே , சிற்றூர் பள்ளிகளை இயற்கைமரணத்தை நோக்கி
தள்ளுவது
சிறந்த செயலாகாது; அறமாகாது.
பள்ளிகளை மூடும்,கல்வியை சீரழிக்கும் தமிழக கல்வித்துறையின் முறையற்றச் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்போம்!கடுமையாக எதிர்ப்போம்!
-முருகசெல்வராசன்,
மா.செ.,
தநாதொப
ஆசிரி்யர்மன்றம் - நாமக்கல்மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக