வியாழன், 19 டிசம்பர், 2019

டிசம்பர் 19,
வரலாற்றில் இன்று.

முத்தமிழ்க் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம் நினைவு தினம் இன்று.

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994)  தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார்.

நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காக
வும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.

 துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும்,
அவரது திராவிட நாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்.
அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.

இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.