செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஜனவரி 21,
வரலாற்றில் இன்று.

முதல் அணு நீர்மூழ்கி கப்பல் செயல்பாட்டிற்கு வந்த தினம் இன்று.

அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக்கப்பல் நாட்டிலஸ், முதன் முதலாக 1954-னஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று அமெரிக்காவின் தேம்ஸ் நதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அணு நீர்மூழ்கிக்கப்பல், டீசலினால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை விட நீண்ட நேரத்திற்கு கடலின் அடியில் இருக்க முடியும்.

 அமெரிக்காவின் புது லண்டன் பகுதியிலிருந்து சான் ஜூவான் வரையிலும் 1200 கடல் மைல்கள்(2200 கி.மீ) வரை இந்நீர்மூழ்கி கப்பலின் நீண்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 நாட்டிலஸ் கப்பலிற்கு 1980ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. 1982இல் தேசிய வரலாற்று சின்னமாக இக்கப்பல் அறிவிக்கப்பட்டது. கிரோடன் நகரில் அருங்காட்சியகமாக செயல்படும் இக்கப்பலைக் காண வருடத்திற்கு 2,50,000 பார்வையாளர்கள் வருகின்றனர்.