வெள்ளி, 24 ஜனவரி, 2020

பள்ளிக்கல்வி துறைக்கு திறந்த மடல் வழி வேண்டுகோள் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை)

காலணிகளுக்கு ஏற்ப பாதங்கள் நறுக்கப்படுவது அறமாகுமா?!
********************
பள்ளிக்கல்வித் துறைக்கு திறந்த மடல் வழி வேண்டுகோள்:

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையம் உருவாக்குவது என்பது கருத்தொற்றுமை அடிப்படையிலோ, சனநாயக அடிப்படையிலோ அமையப்பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஒன்றிய அலுவலர்களின், ஒன்றியத்தில் சக்திபடைத்த ஆசிரியர்களின் ஆசைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளதாக பேசப்படுகிறது.
அவைகள்:
1)பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையங்களின் எண்ணிக்கை ஒருசில ஓன்றியத்தில்  2019திசம்பர் மாதத்தில் ஒரு எண்ணிக்கையில் சொல்லப்படுகிறது.
2020 சனவரியில் வேறு எண்ணிக்கையில் மாற்றப்படுகிறது.
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையங்களின் எண்ணிக்கையை குறைப்பது பொருத்தமற்றச் செயலாகும் . சரியற்றச்செயலாகும்.

2)மல்லசமுத்திரம் பேரூராட்சியில் அமைந்துள்ள கோட்டைமேடு தொடக்கப்பள்ளி  அதே மல்லசமுத்திரத்தில் அமைக்கப்பட்டு உள்ள பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு  பலகிலோமீட்டர்  தூரத்திற்கு அலைக்கழிப்பு செய்யப்படுவது துரதிருச்டவசமானதாகும் .
இத்தகு அலைக்கழிப்பு பெரும் ஐயப்பாட்டை எழுப்புகிறது.

3)எருமப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சிங்களங்கோம்பை மற்றும் கைகாட்டி ஆகிய இரண்டு பள்ளிகள் அதே எருமப்பட்டியில் அமைந்துள்ள பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு  வரகூர் பள்ளித் தொகுப்பாய்வு மையத்தில் இணைக்கப்படுவது தவறான செயலாகும்.
இத் தவறுகள் திருத்தப்படவேண்டும்.

4)எருமப்பட்டி ஒன்றியத்தில் ஐந்து மையங்கள் தொடந்து செயல்பட வேண்டும். பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி (பெண்கள்), எருமப்பட்டி (ஆண்கள்),வரகூர் மற்றும் காவக்காரண்பட்டி மேல்நிலைப் பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையங்கள் தொடந்து செயல் படவேண்டும்.

5)தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் உள்ளார்ந்த நோக்கம், அர்த்தம் சிதைக்கப்படுவது என்ன வகையான விளைவுகளைத் தரும்?! பரிசீலனை செய்திட வேண்டும்.
-மெ.சங்கர் (ம)
 முருகசெல்வராசன்.