செவ்வாய், 17 மார்ச், 2020

ஆரம்பக்கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?_ மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

"கல்வி காவிமயமாகிறது;தனியார் மயமாகிறது;
வணிகமயமாகிறது;
கல்வியில் இருள் சூழ்கிறது "
எனும் கருத்தும்,
விமர்சனமும் நாடெங்கும் பரவலாக முன்வைக்கப்பட்டடு வரும் நாள்களில் இக்கேள்வியும்- இப்பதிலும் முக்கியத்துவம் பெற்றதாகிறது.
********************
ஆரம்பக் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறதா?! என்ற கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக கெளஷலேந்திர குமார் எம்.பி.,

 ''ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ஆரம்பக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்து உள்ளது. இதுதொடர்பான திட்டம் ஏதாவது மத்திய அரசுக்கு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.


இந்தக் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார்.

அவர் கூறும்போது,
 ''நிதி ஆயோக்கின் ஆலோசனைப்படி ஆரம்பக் கல்வியைத் தனியார் மயமாக்கும்
திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை''
என்று தெரிவித்தார்.