வியாழன், 9 ஏப்ரல், 2020

அன்புடையீர் வணக்கம்...🙏🏻

மத்திய அரசு வருமான வரித்துறை நேற்றைய செய்தி வெளியீடு...

5இலட்சத்திற்கு குறைவான நிலுவை தொகை உடனடியாக திருப்பி வழங்கப்படும்....

பல நண்பர்களுக்கு..
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது....

சில விளக்கங்கள்..

அரசின் அறிவிப்பு...
இதுவரை ITR e-filing செய்து ...
Refund இருக்கும் பட்சத்தில்...

Refund பெறாதவர்களுக்கு ..
(Refund amount, less than 5 lakhs) ..
உடனடியாக திருப்பி வழங்கப்படும்.....

உதாரணமாக..
நீங்கள் 2018-19 நிதியாண்டில்....
(பிப்ரவரி 2019 மாத ஊதியத்தில் இறுதி பிடித்தம்) கூடுதலாக வருமான வரி கட்டியிருந்தால்...

2019 ஜூலை 31 க்குள்....
தனிப்பட்ட முறையில்..
Online இல்...
Income tax return (ITR) e-file செய்து இருப்பீர்கள்....

அதில் நீங்கள் கூடுதலாக செலுத்தியுள்ள...
வருமான வரியை திருப்பி தர விண்ணப்பித்து இருப்பீர்கள்....

அரசு....
தங்களின் ITR e-filing details, தங்களின் DDO e-filing details, மற்றும் computer generated calculation details....

மூன்றையும் ஒப்பிட்டு பார்த்து...

தங்களின் கோரிக்கை சரி எனில்...

தங்களின் விபரங்கள் சரியாக இருக்கும் நிகழ்வில்..
( 2-3 மாதத்திற்குள்)
வட்டியுடன்...
கூடுதலாக பிடிக்கப்பட்ட தொகை தங்களின் வங்கி கணக்கில் வரவு செய்யப்படும்....


இது வழக்கமான நடைமுறை...

ஒருவேளை தங்களின் ITR இல் அல்லது DDO (24Q) தகவலில்....
ஏதேனும் குறைபாடு/வித்தியாசம் கண்டறியப்பட்டால்....

உரிய விளக்கம் கேட்டு...
தகவல்களை தங்களின் ITR e-filing web page , பதிவேற்றம் செய்வார்கள்..

"Notice" section இல் அந்த தபால் இருக்கும்...

"Notice" பக்கத்தை நாம் பார்க்காத காரணத்தால் சிலர்...
Income tax, refund வரவேண்டியுள்ளது...
நானே/ஆடிட்டர் மூலம் e-file செய்தேன்...
இன்னும் வரவில்லை என்பார்கள்...

இதுபோல்...

(Pending உள்ள cases களுக்கு....)

தற்போது refund செய்யப்படும்...

2018-19 நிதியாண்டில் அல்லது அதற்கு முன் தங்களுக்கு ஏதேனும் refund amount pending எனில் இந்த அறிவிப்பு தங்களுக்கு பொருந்தும்..





2019-20நிதியாண்டிற்கு...
நாம் இன்னும் ITR e-filing செய்யவில்லை.
ஓவ்வொரு ஆண்டும் மே முதல் ஜுலை 31 க்குள் ITR, e-filing செய்வோம்...

எனவே தற்போதைய அறிவிப்பு...
2019-20 நிதியாண்டில் refund உள்ளவர்களுக்கு பொருந்தாது...

அதேபோல் ...

5 இலட்சத்திற்கும் குறைவாக வருமான வரி செலுத்தியவர் களுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும் என்பதும் தவறு....

இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க...
கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமான வரி...
நிலுவை தொகையை சார்ந்தது...
(Refund amount)..