ஞாயிறு, 31 மே, 2020

*🌐மே 31,வரலாற்றில் இன்று:58 பயணிகள் உள்ளிட்ட 65 பேருடன் பயணம் செய்த சென்னை -டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடித்துச் சிதறி 48 பேர் பலியான தினம்(1973)*

மே 31, வரலாற்றில் இன்று.

58 பயணிகள், 7 ஊழியர்களுடன் 1973ஆம் ஆண்டு இதே நாளில்தான் சென்னையிலிருந்து
டெல்லி
புறப்பட்டது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்.

7.35க்கு புறப்பட்டவிமானம்,
9.52க்கு தரையிறங்கவேண்டும்.
அதற்கு 30 நிமிடங்கள் முன்பாக,டெல்லி வசந்த விஹார் பகுதியில் வெடித்து
சிதறியது.48 பேர் இறந்தனர்.17 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்திரா மந்திரிசபையில் மந்திரியாக இருந்த மோகன்குமாரமங்கலம்,
கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம், பஞ்சாப் முன்னாள் முதல்வர்
குருநாம்சிங் இறந்தவர்களில் முக்கியப்பிரமுகர்கள்.

மத்தியமந்திரி பாலகோவிந்தவர்மா, காங்கிரஸ் எம்.பி.விஜயலட்சுமி
உயிர்தப்பியவர்களில் முக்கியமானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக