ஜூன் 18, வரலாற்றில் இன்று.
அடையாறு புற்றுநோய் மையம் நிறுவப்பட்ட தினம் இன்று.
அடையாறு புற்றுநோய் மையம்(Adyar Cancer Institute) சென்னை மாநகரில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும் இன்றைய சூழலில், கடந்த 64 ஆண்டுகளுக்குக முன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.
12 படுக்கைகள்
பலகட்ட முயற்சிக்கு பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், "கெனால் பேங்க்' சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை துவக்கினார்.
1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1954ம் ஆண்டு, ஜூன், 18ம் தேதி முதல், இம்மருத்துவமனை செயல்படத் துவங்கியது.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என, நாளுக்கு நாள் இம்மருத்துவமனை வளர்ச்சி பெற்றது.
1982ஆம் ஆண்டு அடையாறு, சர்தார் படேல் சாலையில் துவங்கப்பட்ட, கிளை மருத்துவ மனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இன்று, பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், அவர்களின் வருமானத்திற்கேற்ப, 60 சதவீதம் பேருக்கு இலவசமாகவும், 40 சதவீதம் பேருக்கு, குறைந்த கட்டணத்திலும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கதிர்வீச்சு, மருந்து, அறுவை என, புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சை முறைகளிலும், "கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வழங்கிவரும் இம்மருத்துவமனையில் ஆண்டிற்கு சராசரியாக, 1.2 லட்சம் பேர், உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
தமிழக அரசு, இம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த, 1.3 கோடி ரூபாய் ஆண்டு நிதியை, சமீபத்தில், 2.5 கோடியாக உயர்த்தியது.
புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, புற்றுநோய் மருத்துவம் தொடர்பான உயர்படிப்புகளையும், இம்மருத்துவமனை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை, சென்னை பல்கலை ஆகியவற்றின் கீழ் இயங்கும், டாக்டர் முத்துலெட்சுமி கல்லூரி, எம்.சிஎச்., (புற்றுநோய் அறுவை சிகிச்சை) - டி.எம்., (மருந்து சிகிச்சை) - எம்.டி., மற்றும் டி.எம்.ஆர்.டி., (கதிரியக்க சிகிச்சை), எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்), பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.
புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுடன், இந்நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், இம்மருத்துவமனை நிர்வாகம், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி, பொது இடங்களில், புகையிலைக்கு எதிரான பிரசாரங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில், உடல் ஆரோக்கியத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இம்மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "இளைஞர் உடல்நலத் திருவிழா' நடத்தப்படுகிறது.
கடந்த, 15 ஆண்டுகளாக, வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது, வருத்தம் அளிக்கிறது. இதை தடுக்க, சிகரெட், பான்பராக் போன்ற புகையிலை பழக்கத்தில் இருந்து, இளைய தலைமுறை விடுபட வேண்டும் என்பதே இம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களின் வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக