ஞாயிறு, 7 ஜூன், 2020

*🌐ஜூன் 7,வரலாற்றில் இன்று:ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம்.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம் இன்று.

ஸ்காட்லாந்து நாட்டு  மகப்பேறு மருத்துவரான ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன்
( Sir James Young Simpson) 1847ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 04ஆம் திகதி  Chloroformஐ
அறுவைச் சிகிச்சைகளின் போது வலி உணரா நிலையை ஏற்படுத்தத் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார்.

1811ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ஆம் நாள்
Edinburghல் பிறந்த அவர் எடின்பரோ பல்கலைக் கழகத்தில்  M.D.பட்டம் பெற்று அங்கு மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் ஆனார்! பாஸ்டனில் அறுவை மருத்துவத்துக்கு ஈத்தரைப் பயன்படுத்தும்
செய்தி ஸ்காட்லாந்துக்கு எட்டியவுடன்,
சிம்சன் முதன்முதலில் ஈத்தரைப் பயன்படுத்திப் பிரசவ வலியைக் குறைத்தார்! பிறகு குளோரோஃபார்மை,
மகப்பேறு மருத்துவர்களும், மதகுருமார்களும் எதிர்த்த போதிலும், பயன்படுத்தினார்!

Chloroform தெளிந்த, நிறமற்ற,கனமான,
தீப்பற்றாத, நீர்ம நிலையில் உள்ள ஈத்தர் போன்று மணமுடைய கரிம ரசாயனச் சேர்மம்! இது அறுவைச் சிகிச்சையின் போது,
வலி உணரா நிலையை ஏற்படுத்த வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்ட முதல் பொருளாகும்! இதில் ஓரளவு நச்சுத்தன்மை
இருப்பதால், வலியை உணரா நிலையை ஏற்படுத்தும் பிற பொருள்கள் நடைமுறைக்கு
வந்தபின் இதன் பயன்பாடு பெருமளவு குறைந்தது!

ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன் குளோரோஃபார்மை பயன்படுத்துவது பற்றிக் கண்டறிந்ததோடு, இரும்புக் கம்பித் தையல்கள், ரத்த ஒழுக்கைத் தடுக்க அழுத்தத்தைப் பயன்படுத்தும் முறை, சிம்சன்
இடுக்கி (நீண்ட மகப்பேற்று இடுக்கி) ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருக்கிறார்!

1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் நாள் சிம்சன் காலமானார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக