சனி, 18 ஜூலை, 2020

*🌷ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்: தனியார் கலைக்கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு*

*🌷ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்:  தனியார் கலைக்கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு*

*தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.*

*தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து, அந்த திட்டத்தையும் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.*

*இதையடுத்து, கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் பெறப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*இந்நிலையில், தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று காலையில் இருந்தே அச்சிட்ட விண்ணப்பங்களை விற்கத் தொடங்கி விட்டன.*

*இதை வாங்குவதற்காக மாணவர்கள் குவிந்தனர். கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக விண்ணப்பங்களை வாங்கினர்.*

*இது  குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.*

*அதன்பேரில் கல்லூரிக் கல்வி இயக்ககம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.*

*தமிழகத்தில் உள்ள 109 அரசு கல்லூரிகளில் 20ம் தேதி முதல்  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.*

*இந்நிலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் அச்சிட்ட விண்ணப்பங்களை தங்கள் விருப்பம் போல விற்பனை மற்றும் வினியோகம் செய்து வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது.*

*அதனால், உடனடியாக தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அச்சிட்ட விண்ணப்பங்களை வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.*

*மேலும், 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பங்களை பெற வேண்டும்.*

*இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.*

*இதற்கிடையே, தனியார் கல்லூரிகள் நேற்று மதியத்திற்குள் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்று தீர்த்தன.*

*இந்த உத்தரவு வந்ததும் விண்ணப்ப விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக