ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஆகஸ்ட் 2, வரலாற்றில் இன்று. இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) பிறந்த தினம் இன்று.

ஆகஸ்ட் 2,
 வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) பிறந்த தினம் இன்று.

வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார். மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார்.

பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், லாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் ஜப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.

நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காக்கி நாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார் மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அளவை உருவாக்க வேண்டினார். விஜயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசியக் கொடியை அறிமுகப் படுத்தினார்.

முதலில் கொடியின் நடுவில் ஓர் ராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியை பருத்தி துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக