ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இது!புதிய கல்விக்கொள்கை அல்ல!இது! பழைய மனுக்கொள்கை !#தேசமே!எழு!

இது!புதிய கல்விக்கொள்கை அல்ல!
இது! பழைய மனுக்கொள்கை !

#தேசமே!எழு!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
#புதியகல்விக்கொள்கை2020

#வெண்ணெய் versus சுண்ணாம்பு

நூற்றிமுப்பது கோடி மக்கள் திரள் கொண்ட நாட்டில் 24,821பேர்களின் தாய்மொழியாக மட்டுமே இருக்கின்ற ஒரு அறிவியல் வளர்ச்சி பெறாத, நவீனமடையாத,சமகால மொழிப் பண்புகள் எதுவுமில்லாத, இலக்கியச் செழிப்போ, கருத்துச் செழிப்போ இல்லாத, மாணவர்களுக்கு எவ்வித பயனையும் தராத சமஸ்கிருத மொழியை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க அரசு நினைக்கிறது என்றால், இந்த இந்துத்துவ அரசு விரும்புகின்ற  தீண்டாமைப் பண்பு கொண்ட சாதி அடுக்குமுறையை,  மனுதர்ம நீதியை தக்கவைக்கிற , அதனை நியாயப்படுத்துகிற எல்லா சூழலையும் சமஸ்கிருதம் தன்னுள் கொண்டிருக்கிறது என்னும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் .

நாடு எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் இந்து முஸ்லிம் பிரச்சனைகளாக மாற்றிப் பார்க்கின்ற மனக் கட்டமைப்பு இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது,அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருக்கும் பிரச்சனை மத்திய அரசு கொண்டுவந்துள்ள  தேசியக் கல்விக் கொள்கையில் (2020) இடம்பெற்றுள்ள மும்மொழி கொள்கை சார்ந்தது.

அரசின் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின் றவர்களின் இணையப் பதிவுகளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிழற்படம் பகிரப்பட்டு வருகிறது. உருது மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது ஏன் சமஸ்கிருத்தத்திற்கு அரசு முக்கியத்துவம்  கொடுக்கக்கூடாது?என்னும் நிலையில் அவர்கள் வாதிடுகிறார்கள் .இதனூடாக முஸ்லிம்களின் மொழியான  உருது மொழியினை கற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு சமஸ்கிருதம் கற்க ஏன் வழங்கக்கூடாது என்பதாக மும்மொழி குறித்த விவாதத்தை மடைமாற்றல் செய்யப் பார்க்கிறார்கள்.

முதலில், உருது மொழி முஸ்லிம்களுக்கு உரிய மொழி மட்டுமல்ல .அது மதம் கடந்த மொழி . இந்தியாவில் உருது மொழி வீழ்த்தப்பட்ட வரலாறு தனியாகப் பேசப்படவேண்டியது .
இரண்டாவது , இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உருது மொழியினைப் போலவே பல்வேறு மொழிகள் அரசுகளின் தனிக் கவனிப்பில் வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாளம் சிறுபான்மை மொழி. மலையாளத் தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் பள்ளி தொடங்கி கல்லூரிவரை  இரண்டாம் பாடமாக மலையாளத்தைக் கற்கின்ற வாய்புகள் இருக்கின்றன. இது போலவே கேரளாவில் தமிழ் சிறுபான்மை மொழி .தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இரண்டாம் பாடமாக தமிழ் பயிலும் சூழல்கள் அங்கு உண்டு .கேரளாவின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை இயங்கி வருகிறது.சில வட்டாரங்களில் கன்னடம் சிறுபான்மை மொழி, சில வட்டாரங்களில் தெலுங்கு சிறுபான்மை மொழி .

உண்மை நிலை இவ்வாறு இருக்க இந்துத்துவவாதிகள் மும்மொழி சிக்கலை இந்து முஸ்லிம் சிக்கலாக மாற்ற முயற்சிகிறார்கள். 24,821 எண்ணிக்கை யிலான மக்கள் மட்டுமே தாய்மொழியாகக் கொண்டிருக்கிற சமஸ்கிருத மொழிக்காக இந்தியாவில் சென்ற மூன்றாண்டுகளில் மத்திய அரசு செலவழித்துள்ள தொகை என்பது 643.84 கோடி. .இதே மூன்றாண்டுகளில்  பலகோடி மக்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ்,மலையாளம்,, கன்னடம், தெலுங்கு ,ஓடிய மொழிகளுக்காக மத்திய அரசு செலவழித்திருக்கும் தொகை வெறும் 29 கோடி மட்டுமே ..

இந்தப் பின்னணியில் இருந்துதான் தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழிப் பிரச்னையை அணுக வேண்டி இருக்கிறது. நூற்றிமுப்பது கோடி மக்கள் திரள் கொண்ட நாட்டில் 24,821பேர்களின் தாய்மொழியாக இருக்கின்ற ஒரு அறிவியல் வளர்ச்சி பெறாத, நவீனமடையாத,சமகால மொழிப் பண்புகள் எதுவுமில்லாத, இலக்கியச் செழிப்போ,கருத்துச் செழிப்போ இல்லாத, மாணவர்களுக்கு எவ்வித பயனையும் தராத சமஸ்கிருத மொழியை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க அரசு நினைக்கிறது என்றால், இந்த இந்துத்துவ அரசு விரும்புகின்ற சாதி அடுக்குமுறையை, தக்கவைக்கிற , அதனை நியாயப்படுத்துகிற எல்லா சூழலையும் சமஸ்கிருதம் தன்னுள் கொண்டிருக்கிறது என்னும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் .

நாம் என்ன நினைக்கிறோம் என்றால் மும்மொழி என்றால் மூன்றாவது மொழியாக நாம் விரும்பும் மொழியைத் தேர்வு செய்து படிக்க முடியும் என்று.ஆனால் அதற்கான எந்த வாய்ப்பும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற இந்த மும்மொழிக் கொள்கையில் இல்லை. அரசுதான் தீர்மானம் செய்கிறது.மூன்றாவது மொழி எதுவென்று.
அரசின் தீர்மானம் இந்தியாகவும்,
சமஸ்கிருதமாகவும் மட்டுமே இருக்கிறது.அந்த மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள்  மட்டுமே பள்ளிகளில் கல்லூரிகளில் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள் .

சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் வட இந்தியத் தொழிலாளர்கள் எத்தனை லட்சம் பேர் பிழைப்பு தேடி வருகிறார்கள்.எத்தனை லட்சக்கணக்கான மார்வாடிகள் தொழில் நிறுவனம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் வட இந்திய மாநிலங்களில் இருக்கின்ற  கல்வி நிலையங்களில் மத்திய  அரசு தமிழை மூன்றாம் மொழியாக கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்குமா ?

செய்யாது.ஏன் என்றால் அரசின் நோக்கம் கல்வி கற்றுக் கொடுப்பது அல்ல  .மாறாக,   
மனு தர்மத்தையும்,
வர்ணாசிரமக் கொள்கை
யினையும்  இந்திய மண்டைகளுக்குள் உட்கார வைப்பது.

நன்றி:
Thuckalayhameem Musthafa .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக