வியாழன், 3 செப்டம்பர், 2020

செப்டம்பர் 3,வரலாற்றில் இன்று.ராஜேஸ்வரி சட்டர்ஜி நினைவு தினம் இன்று (2010).

செப்டம்பர் 3,
வரலாற்றில் இன்று.

ராஜேஸ்வரி சட்டர்ஜி நினைவு தினம் இன்று (2010).


ராஜேஸ்வரி சாட்டர்ஜி  இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை மின் பொறியியல் துறையில் பெற்றார் . இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான இவர் அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.


விருதுகள்


மவுண்ட்பேட்டன் பரிசு (இங்கிலாந்து) - சிறந்த கட்டுரைக்காக மின் மற்றும் வானொலி பொறியியல் கழகம் வழங்கியது.


ஜே.சி. போஸ் நினைவு பரிசு - சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கபட்டது.


ராம்லால் வாத்வா விருது - சிறந்த ஆராய்ச்சி மற்றும் விரிவுரையின் மூலம் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக