அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.
கண்ணதாசன் நினைவு தினம் இன்று.
திரைப்பட பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான்.இலக்கியங்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கி தந்தவர் அவர்.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக