திங்கள், 30 நவம்பர், 2020

*📘பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.*

*📘பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.*


பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசாணைக்கு ஏற்ப கல்வி தொலைக்காட்சியிலும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் என்றார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர் இடமிருந்து கருத்துக்களை திரட்டி வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு முதல் புதிய கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக