தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்!
தேவையற்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் -மன்றம் .
திரு.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!
+++++++++++++++++++++++++++++++++++++
கொரோனா கொடுந்தொற்று முற்றிலுமாய் நீங்காத சூழலில், பெருமழையும் கடும்புயலும் கரம்கோர்க்கும் காலத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி 26.11.2020அன்று கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது.
13 மாவட்டங்களுக்கு 26.11.2020அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.,தற்போது மேலும் 3 மாவட்டங்களை சேர்த்து 16 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சரி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி எனில் மீதமுள்ள மாவட்டங்களில் மட்டும் போராட்டம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுமா?அவ்வாறு நடத்துவது சரியான கணக்கெடுப்பு ஆகுமா?என்று தமிழகரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தனைக்கும் மேலாக கொரோனா கொடுந்தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் முற்றிலும் இயங்கவில்லை. நாள்தோறும்சுழற்சிமுறையில் 50சதவிகித ஆசிரியர்களுடன் பள்ளிகள் மாணாக்கர் சேர்க்கைக்காக இயக்கப்பட்டு வருகிறது.
கள நிலைமை இவ்வாறிருக்க
பள்ளிக் கல்வித்துறையின்
சில மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணிக்கு வந்த மற்றும் வராத ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரிக்க சுற்றறிக்கை அனுப்புவது எதற்கு?
ஆசிரியர்களை மிரட்டவா?
அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கவா?
அசாதாரணமான சூழல் மாநிலத்தில் நிலவும் இவ்வேளையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களைத் தாண்டி புயலின் தாக்கம் நீடித்தால் எவ்வாறு ஆசிரியர்கள் பணிக்கு செல்லமுடியும்?
அவ்வாறு செல்லும் வழியில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? அரசு பொறுப்பேற்குமா?
நிவர் புயலின் கோரத்தாண்டவத்தில் மாநிலத்தின் மக்கள் சிக்கித்தவிக்கையில் இக்கணக்கெடுப்பு அர்த்தமுடையது தானா?
ஆசிரியர்களைஅலைக்கழிக்கும் நோக்கம்கொண்டதா?என்று ஆசிரியர்களிடையே பேசப்படு வருகிறது.
பள்ளிகள் இயங்காத சூழலில் பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சுற்றறிக்கை தேவையற்றதாகவே ஆசிரியர்களால் பார்க்கப்படுகிறது. அகில இந்திய வேலை நிறுத்தத்தைக் காரணமாக காட்டி தமிழகத்து ஆசிரியர்களிடம் பீதியை உருவாக்கும் மனநிலையில் கல்வித்துறை அலுவலர்கள் செயல்படுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்ட மாவட்டங்களில் அவ்வறிக்கையை திரும்பப்பெற பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டு ஆசிரியர்களின் நலன்காக்குமாறும், ஆசிரியர்களை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாத்திடுமாறும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
_முனைவர்-மன்றம்.
நா.சண்முகநாதன்,
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக