சனி, 12 டிசம்பர், 2020

தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம் மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிலவிவருகிறது. இதனையடுத்து இந்த மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பதற்கான முடிவை முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்போம் என்றும் தெரிவித்தார். கல்லூரி தொடங்கிய நிலையில், பள்ளிகளும் இம்மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக