வியாழன், 17 டிசம்பர், 2020

*📚தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது?.. முதல்வர் பழனிசாமி விளக்கம்.*

*📚தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: முதல்வர் விளக்கம்*

*கொரோனா வைரஸ் தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.*

*தமிழகத்தில் கொரோனா தொற்று நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.*

*உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டி உள்ளது.*

*பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.*

*பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது ‘‘கொரோனா வைரஸ் தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.*

 *ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. உயிர்தான் முக்கியம் என்பதால் அவர்களுடயை கருத்து, எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.*

*பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்; அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக