புதன், 27 ஜனவரி, 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கை மனுவை , 27.01.2021-புதன் பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா) அவர்களிடம் கோரிக்கை மனு அளித்த நிகழ்வு.

அன்புடையீர்! வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை  மாநாட்டின்  மாவட்ட அளவிலான  15 அம்சக் கோரிக்கை மனுவை ,  27.01.2021-புதன் பிற்பகல் 05.30 மணியளவில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் (மா)  அவர்களிடம் அளித்து கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது. 


மேலும் , பரமத்தி ஒன்றியம் -  திருமதி.மு.செயந்தி,  இடைநிலை ஆசிரியர் என்பவருக்கு 2020 மார்ச்சு  மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும் எனும் தனிக்கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி,
 ஒன்றியச் செயலாளர்கள் க.சேகர் (பரமத்தி)
 சி.கார்த்திக் (திருச்செங்கோடு) திருச்செங்கோடு ஒன்றியப் பொருளாளர் க.சிவக்குமார்
ஆகியோர் இச்சந்திப்பில்  பங்கேற்றனர்.

-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக