வியாழன், 25 மார்ச், 2021

*🏮பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...*

*🏮பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...*
 
*தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது!*


*கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.*


*அப்போது அவர் பிராவிடண்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஊழியர் செலுத்தும் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அதன் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு என அறிவித்திருந்தார்.*


*அதாவது, தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் EPF  உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12 சதவிகித கட்டாய பி.எஃப் தொகை மற்றும் விருப்ப பி.எஃப் (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.*


*இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அதன் மீது 127 திருத்தங்கள் கூறப்பட்டன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிதி மசோதா நிறைவேறியது.*


*இந்தக் கூட்டத்தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், "தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்தார். இதனால் வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள், பெரிதும் பலனடைவார்கள் எனச் சொல்லப்படுகிறது.*


*மேலும் அவர், "பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு தொழில்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக