சனி, 6 மார்ச், 2021

*🌻ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்...*

*🌻ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான சில சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்...*

*லைசன்ஸ் புதுபிக்க ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம் செல்ல வேண்டாம்.*


*ஓட்டுநர் உரிமம் பெற எல்எல்ஆர் பதிவு, வாகன பதிவு, ஆதார் மூலமாக ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், மாற்று வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை ஆன்லைன் மூலமே பெறலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு வரும் மக்கள் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*

*Online மூலம் பெறக்கூடிய சேவைகள்...*

*பழகுநர் உரிமம்*

*ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல்(வாகனத்தை இயக்கும் சோதனை தேவையில்லை எனில்)*

*நகல் ஓட்டுநர் உரிமம்*

*ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பதிவு சான்றிதழ்*

*சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்கல்*

*உரிமத்திலிருந்து வாகனத்தின் வகுப்பு சரண் செய்தல்*

*மோட்டார் வாகனத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம்*

*முழுமையாக கட்டப்பட்ட வாகன உடலுடன் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்*

*நகல் பதிவு சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம்*

*பதிவு சான்றிதழுக்காக என்ஓசி வழங்குவதற்கான விண்ணப்பம்*

*மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு*

*மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்*

*பதிவு சான்றிதழில் முகவரி மாற்றத்தின்* *தகவல்*

*அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சிக்கான பதிவுக்கான விண்ணப்பம்.*

*தூதரக அதிகாரியின் மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்*

*தூதரக அதிகாரியின் மோட்டார் வாகனத்தின் புதிய பதிவு அடையாளத்தை வழங்குவதற்கான விண்ணப்பம்*

*வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒப்புதல்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக