குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி
தேர்தல் அலுவலருக்கு
வன்மையான கண்டனம்!
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்!
----------------------------
குமாரபாளையம்
சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவருக்கும்
பயிற்சி வகுப்பு என்று அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பயிற்சிக்கு (03.04.2021)அன்று குமாரபாளையம் பயிற்சி மையத்திற்கு வரவழைத்து விட்டு , அனைவரும் குமாரபாளையம் வந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்றப் பிறகு ,
எல்லோருக்கும் பயிற்சி இல்லை என்று அறிவிப்பு செய்வது
மிக மோசமான நடவடிக்கையாகும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்
(po )மற்றும் வாக்குச்சாவடி
முதல் நிலை அலுவலர்( po1)க்கும் மட்டுமே பயிற்சி என்று கூறி வாக்குச்சாவடி அலுவலர்களை(po 2 & po3) வெளியேற்றுவது என்ன வகை நிர்வாக முறை ?!
என்ன வகையான நடைமுறை!?
கோடைக்காலத்தின்
கொடும் வெயிலிலும்,
வெப்பத்திலும்
பலநூறு கிலோமீட்டர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை அலைக்கழிப்பதும்,
விரட்டியடிப்பதும் கண்டனத்திற்குரியதாகும்.
சட்டமன்றப்
பொதுத்தேர்தல்
காலத்தில் ,
கொரோனாத் தொற்று பரவல் நேரத்தில் பொறுப்பற்ற வகையில் செயல்படும் நாமக்கல் மாவட்ட வருவாய் துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் துரதிருச்டவசமானதாகும்.
வாக்குச்சாவடி அலுவலர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையற்ற வகையில் உடல்அளவிலும், உள்ளஅளவிலும் நோகடிக்கச்
செய்வதை குமாரபாளையம்
சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,
தமிழக அரசு தரப்பினரும் கைவிடல் வேண்டும்.
03.04.2021ஆம் நாளைய குமாரபாளையம் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நடத்தப்பட்ட விதம் என்பது கொடுமையிலும் கொடுமையானதாகும்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையற்ற வகையில் அலைச்சலை,மன உளைச்சலை உருவாக்கித் தந்துள்ள ,
தேர்தல் ஆணைய்தின் மாண்பினை சிதைத்துள்ள
குமாரபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக