வியாழன், 30 செப்டம்பர், 2021
மாணவர்களின் வீடு தேடிச் செல்லும்"மக்கள் பள்ளி" திட்டத்தினை செயல்படுத்துதல் மற்றும் குழுக்களை உருவாக்குதல் _நடைமுறைப்படுத்துதலில் பின்பற்ற வேண்டியவை பற்றிய மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு அரசின் நற்பெயரை- நற்புகழை சீரழிக்கும் சட்டவிரோத எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் பாய்ந்திட வேண்டும்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சுவரொட்டி இயக்கம்
தமிழ்நாடு அரசின்
நற்பெயரை- நற்புகழை
சீரழிக்கும் சட்டவிரோத
எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் பாய்ந்திட வேண்டாமா?!
கல்வித்துறைக்கு களங்கம் விளைவிக்கும்
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் மீது ஒழுங்குநடவடிக்கைகள்
பாய்ந்திட வேண்டாமா?!
தமிழக அரசே! கல்வித்துறையே!
தலையிடுக!
புதன், 29 செப்டம்பர், 2021
செவ்வாய், 28 செப்டம்பர், 2021
ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS TEAM ன் முக்கிய செய்தி
ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு:
அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன்
மேலே மெயில் MAILBOX என்பதை கிளிக் செய்தவுடன்
உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும்
அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும்
CLASS & SECTION வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன
அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில்
அது அவர்களுக்கான வேலை முடிப்பது சிரமமாக இருக்கும்
எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து
அதை EMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்
இனிவரும் காலங்களில் EMIS சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX) வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.
அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளைப் பற்றி பேச்சுப் போட்டி நடத்துதல் - வட்டார அளவில் சிறந்த ஐந்து மாணவ, மாணவியர்களின் பெயர்பட்டியலை தொகுத்து அனுப்பக் கோருதல் சார்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆணை
நாமக்கல் மாவட்டம் - தமிழ் வளர்ச்சி - அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளைப் பற்றி பேச்சுப் போட்டி நடத்துதல் - வட்டார அளவில் சிறந்த ஐந்து மாணவ, மாணவியர்களின் பெயர்பட்டியலை தொகுத்து அனுப்பக் கோருதல் சார்பு.
NHIS NEW FORMAT _ 2 அசல் படிவங்களை பூர்த்தி செய்து வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க ஆணை
NHIS -அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 - புதிய விண்ணப்ப படிவத்தில் பணியாளர்கள் அனைவரும் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் - தொடர்பாக நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் ஆணை...
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை-கோரிக்கை மனு இயக்கம்
கோரிக்கை மனு இயக்கம்
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவாற்றப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று (27/09/2021) கோரிக்கை மனு இயக்கம் - நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதென்றும், உயர் அலுவலர்களுக்கு அஞ்சலில் அனுப்புவது என்றும் முடிவாற்றியது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடமும், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 26 செப்டம்பர், 2021
அக்டோபர் 6 இல் எருமப்பட்டியில் வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
அக்டோபர் 6 இல்
எருமப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை அம்பலப்படுத்திடுவோம்!
மன்றப் படையே!
ஒன்று கூடுக!
வென்று காட்டுக!
சனி, 25 செப்டம்பர், 2021
வெள்ளி, 24 செப்டம்பர், 2021
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 23.09.2021
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வேலகவுண்டம்பட்டி
மன்ற அலுவலகத்தில் இன்று (23.09.2021) பிற்பகல் 4.00 மணிக்கு வட்டாரத் தலைவர் திருமதி.சு.பேபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திரு. முருக செல்வராசன்
மாவட்ட செயலாளர் திரு. மெ.சங்கர்
மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் திரு. க.தங்கவேல்
மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.ரவிக்குமார்
மாவட்ட துணை செயலாளர் திரு. க.வடிவேல்
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு. சு.செல்வகுமார்
வட்டார மகளிர் அணி செயலாளர் திருமதி. ப.சுமதி
வட்டார பொருளாளர் திரு.தே.மணிகண்டன்
வட்டார செயலாளர் திரு. பெ.சிவக்குமார்
வட்டார துணை தலைவர் திரு .கு.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....
வியாழன், 23 செப்டம்பர், 2021
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும்
1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?- கல்வி அமைச்சர் பேட்டி
1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை:
தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:
1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்வு குறித்து சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் போது,
பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.
பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன.
கோவிட் அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
கோவிட் பரவல் கட்டுக்குள் இருப்பது பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
புதன், 22 செப்டம்பர், 2021
விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O.(Ms)No.89 date 09.09.2021
முக்கிய குறிப்பு:
இந்த அரசாணையின் படி சில வலைதளங்களில் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு வீட்டு வாடகைப்படி இல்லை என்ற தகவல் தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை யாதெனில்
9 மாதங்களுக்கு மேல் விடுப்பில் இருப்பவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று இருந்த சட்ட வரம்புக்குள் மகப்பேறு விடுப்பு இருந்து வந்தது.
தற்போது மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலம் என நீடித்ததால் விதி எண் 101 a ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை படி பிடித்தம் செய்ய படத்தக்க விடுப்புகள் பட்டியலிலிருந்து மகப்பேறு விடுப்புக்கான ஓராண்டு கால விடுப்பினை நீக்கியுள்ளனர்.
எனவே ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு எப்போதும் போல் வீட்டு வாடகைப்படி தொடரும்
செவ்வாய், 21 செப்டம்பர், 2021
திங்கள், 20 செப்டம்பர், 2021
மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!
மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!
தமிழ்நாட்டின்
கல்வி நலன்_
ஆசிரியர் நலன் சார்ந்த 63 கோரிக்கைகளை கலந்துரையாடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!
மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.சு.இரமேஷ், மாநில வெளியீட்டுச் செயலாளர் திரு.வே.விசயகுமார் ,ஆகியோர் பொதுச்செயலாளர் உடன் பங்கேற்பு!
புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு.க.சு.செல்வராசு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை நிகழ்வுகளில் உடன் இருந்து அமைப்பிற்கு உதவினர்!
ஆன்லைன் மோசடிகளை தடுக்க புகார் அளிக்கலாம்.
அலைபேசி மூலம் பணம் பறிப்பது போன்ற ஆன்லைன் (Cyber Crime) மோசடிகளை ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம்
புகார் பதிவு செய்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கீழே இணைப்பில்
ஞாயிறு, 19 செப்டம்பர், 2021
20.09.2021 அன்று நடைபெற உள்ள BRTs இடமாறுதல் கலந்தாய்வில் நீதிமன்ற தீர்ப்பாணையை பின்பற்ற வேண்டும்
20.09.2021 அன்று நடைபெற உள்ள BRTs இடமாறுதல் கலந்தாய்வில் நீதிமன்ற தீர்ப்பாணையை பின்பற்ற வேண்டும்
LATER THIS ORDER WAS CANCELLED
ஆசிரியர்களின் 50% கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்
ஆசிரியர்களின் 50% கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் - 18.09.21 அன்று நடைபெற்ற சங்கப் பொறுப்பாளர்களுடனான கூட்டத்திற்குப் பின் கல்வி அமைச்சர் அறிவிப்பு.
BRTs பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
நாளை 20.09.21 நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இணை இயக்குநரின் செயல்முறைகள்