செவ்வாய், 28 செப்டம்பர், 2021

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை-கோரிக்கை மனு இயக்கம்

 கோரிக்கை மனு இயக்கம்

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவாற்றப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று (27/09/2021) கோரிக்கை மனு இயக்கம் - நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதென்றும், உயர் அலுவலர்களுக்கு அஞ்சலில் அனுப்புவது என்றும் முடிவாற்றியது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடமும், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக