வங்கிகளை சூறையாடுவதா? வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 நாள் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. யெஸ் வங்கி மற்றும் ஐஎல்&எஃப்எஸ் போன்ற நலிவடைந்த நிதி நிறுவனங்களை மீட்பதற்கு வங்கிகள் பயன்படுத்தப்பட்டா லும், 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பாக்கி காரணமாக பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட ரூ.2.85 லட்சம் கோடியை இழந்துள்ளன என்று தேசிய வங்கிகள் கூட்டமைப்பு (யுபிஎஃப்யு) குற்றம் சாட்டியுள்ளது. தேசிய வங்கிகள் கூட்டமைப்பு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 13 நிறு வனங்களின் நிலுவைத் தொகை ரூ.2,84,980 கோடி உள்ளது. குளோபல் டிரஸ்ட் பேங்க், யுனைடெட் வெஸ்டர்ன் பேங்க், பேங்க் ஆஃப் கராட் போன்ற நலிவடைந்த தனியார் துறை வங்கி களை மீட்டெடுக்க பொதுத்துறை வங்கிகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன என்பது நிதர்சனமான உண்மை. தனியார் துறையின் மிகப்பெரிய என்பிஎப்சி, ஐஎல்&எப்எஸ், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி மூலம் மீண்டும் மீட்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கான முத்ரா, தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வதான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா போன்ற பெரும்பாலான அரசுத் திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் சேவை தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் சாமானிய மக்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் நலன்களை பாதிக்கும். வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அரசு முன்வந்தால், தேச நலனுக்கும், அதன் நலனுக்கும் கேடு விளைவிக்கும். வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக காலவரை யற்ற வேலைநிறுத்தம் உட்பட எந்த எல்லைக்கும் செல்ல வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தயாராக உள்ளனர். பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்கினாலும் வங்கிகள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை (Non-Performing Asset) பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சொத்துக்கள் தான். இதில் பெரும் பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமானது என்கிறது தேசிய வங்கிகள் கூட்டமைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக