செவ்வாய், 4 அக்டோபர், 2022

தேர்தல் களத்தில் இருந்து மன்ற மடல்!+++++++++++++++++

தேர்தல் களத்தில் இருந்து மன்ற மடல்!
+++++++++++++++++

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியக் கிளை தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியது!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 
நாமக்கல் மாவட்ட அமைப்பு 
மாவட்டத் தேர்தலை நோக்கி பயணிக்கிறது!
----------------------------------------
அன்பும்- ஆற்றலும் நிறைந்த மன்றத்தின் பொறுப்பாளர்களே!
மன்ற மறவர்- மறத்தியரே!
தங்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள்!

தங்களின் 
மலர் கரங்களில் மன்ற மடல்!
மன்றத்தின் தேர்தல் பணிகள் சுமந்து 
மடல் விரிகிறது!
++++++++++++++++++

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழு 
முடிவுகளின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் சார்ந்த ஒன்றிய அமைப்புகளின்  கிளைத் தேர்தல் 
நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

ஒன்றியத் தேர்தல் அறிவிப்புகள்,
ஒன்றியத் தேர்தல் ஆணையாளர்கள் நியமனங்கள் ,
ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டிய பொறுப்புகளின் விபரங்கள்,
வாக்காளர் பட்டியல் ,
ஒன்றியத் தேர்தல் விதிமுறைகள் ஆகியவற்றை  மாவட்ட அமைப்பு  15 நாள்கள் கால அவகாசத்தில் வெளியிட்டு வருகிறது!

இதனடிப்படையில்
பரமத்தி ,
வெண்ணந்தூர் மற்றும் சேந்தமங்கலம் ஒன்றியக் கிளைகளின் தேர்தல் நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 03.10.2022 (திங்கள்)
அன்று நாமக்கல் மாவட்டத்தில் 
முதல் ஒன்றியக் கிளைத் தேர்தலாக பரமத்தி ஒன்றியக் கிளைத் தேர்தல் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று உள்ளது.

பரமத்தி ஒன்றியத்
தேர்தலையடுத்து  வெண்ணந்தூர் மற்றும் சேந்தமங்கலம் ஒன்றியத் தேர்தல்கள் எதிர்வரும் 16.10.2022 (ஞாயிறு) அன்று நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏழு ஒன்றியக்கிளைத்
தேர்தல்கள் நிறைவு பெற்றதும்  மாவட்டச் செயற்குழுக்
கூடி மாவட்டத்
தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுத்து செயல்படத் தொடங்கிட வேண்டி உள்ளது.

நாமக்கல் மாவட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை  பொதுச்செயலாளர் அவர்களால் வெளியீடு செய்யப்பட்ட  பிறகு மாவட்டத் தேர்தல் ஆணையாளர்கள் வசம் மாவட்ட நடவடிக்கைகள் சென்று விடுவதால் எந்தவொரு ஒன்றியத்தேர்தல் நடத்துவதற்கும் மாவட்ட அமைப்பு உரிமை அற்றதாகி விடுகிறது‌.
ஆகையால்,
ஒன்றியத் தேர்தல் நடத்திடாத கிளைகள் மாவட்டத் தேர்தலில் பங்கேற்கவும்- வாக்களிக்கவும் உரிமை அற்றதாகிவிடுகிறது.
மேலும், ஒன்றியக் கிளைகள் கலைக்கப்பட்டு அமைப்புக்குழு அமைக்கப்படும் அவசியம் 
ஏற்பட்டுவிடுகிறது.  

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியக் கிளை அமைப்புகளும்
மாநில -மாவட்ட  அமைப்பின் தேர்தல் விதிமுறைகள்  மற்றும் 
மாநில அமைப்பின் சட்ட  திட்டங்கள் -நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பும்- கடமையும்   கொண்டதாகும்.


ஆகவே , அனைத்து ஒன்றியக் கிளைகளும் 
உறுப்பினர் பட்டியல் (4) நகல்கள், உறுப்பினர் அடிக்கட்டுகள்,
உறுப்பினர் பங்குத் தொகை, நாள்காட்டி தொகை மற்றும் மாநாட்டு நிதி உள்ளிட்டவைகளை மாவட்ட அமைப்பிடம் விரைந்து ஒப்படைத்திடல் வேண்டும்.
ஒன்றியத்
தேர்தல் நடவடிக்கைகளை விரைந்து தொடங்கிடல் வேண்டும்.

ஒன்றியத் தேர்தல் நடவடிக்கைகளில் எவ்விதமான சுணக்கமும்- தொய்வும் காணப்படலாகாது.
ஒன்றியத்தேர்தல் நடவடிக்கைகளில் எந்தவொரு சமரசத்திற்கும் இடமளித்தலாகாது.
இது மாவட்ட அமைப்பின் உறுதிமிக்க நிலைப்பாடாகும்.

மக்களாட்சியின் தத்துவம்
சங்க சனநாயகம் ,
தேர்தல் நடைமுறைக் கொள்கை ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்போம்!உரத்துப்பேசுவோம்!உறுதியோடு கடைப்பிடிப்போம்!

தேர்தல் சனநாயகத்
திருவிழாவில் அனைவரும் மகிழ்வோடு-
எழுச்சியோடு-
உற்சாகத்தோடு பங்கேற்று 
ஒன்றிய அமைப்பை பலப்படுத்துங்கள்! வலுப்படுத்துங்கள்! சங்க சனநாயகத்தை காத்திடுங்கள்!

 *ஒற்றுமை வலிமையாம்* 

தங்களின் அன்புள்ள,

மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக