✍️சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
1முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் 1ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக