திங்கள், 12 ஜூன், 2023

எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.

'எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.
 

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலையை அறிய ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அடிப்படை திறனாய்வு (பேஸ் லைன் சா்வே) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

நிகழ் கல்வியாண்டில் (2023-2024) இந்தத் திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலை குறித்து அறிய தமிழ், ஆங்கில், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வு ('பேஸ் லைன் சா்வே') 'எண்ணும் எழுத்தும்' செயலி மூலம் ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 

மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை, வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் சாா்ந்த வகுப்பறை செயல்பாடுகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக