திங்கள், 30 டிசம்பர், 2019

டிசம்பர் 30,
வரலாற்றில் இன்று.

முதல் வண்ணத்
தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த தினம் இன்று.


On December 30, 1953 the Admiral Model C1617A became the first commercially offered color television. It retailed for $1175 (about $11,050 in 2009 dollars).

 NBC became the first to broadcast coast-to-coast color two days later on New Years 1954 with The Tournament of Roses Parade.
  • டிசம்பர் 30,
வரலாற்றில் இன்று.


விக்ரம் சாராபாய் நினைவு தினம் இன்று.

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழு முதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்மபூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சி கல்வியின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 52ஆவது வயதில் (1971) காலமானார்.
டிசம்பர் 30, வரலாற்றில் இன்று.

இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார் நினைவு தினம் இன்று(2013).


நம்முடைய வேப்பிலையை அமெரிக்கா காப்புரிமை பெற்ற போது கடுமையாக போராடியதோடு, அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியவர் நம்மாழ்வார்.

1938 ஆண்டு இதே நாளில் தஞ்சையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளங்கலைப்படிப்பை படித்தவர். அறிவியலில் முனைவர் பெற்ற இவர் ஜப்பானிய விவசாயி மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலில் நாட்டம் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு விஷயங்களை கற்றிருந்த அவர், பின்னர் நண்பர்களிடம் சேர்ந்து இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். பயிர்களை விளைவிக்க ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு எதிராக கடும் பிரச்சாரங்களை நம்மாழ்வார் மேற்கொண்டார். மேலும் இயற்கை உரம், இயற்கையான உணவு ஆகியவற்றுக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 2004ம் ஆண்டில் பூம்புகார் முதல் கல்லணை வரை உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கு நம்மாழ்வார் சென்றார். அங்கு கிராம மக்களை சந்தித்து இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார்
நம்முடைய வேப்பிலைக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றது. அப்போது அதற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தி வென்றார். பெரும் போராட்டத்திற்கு பின்னர்தான் இந்தியா அதனை மீட்டது. அதற்கான பெருங்குரலை நம்மாழ்வார் எழுப்பினார்.
அதே போன்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதற்கான முதல் குரலை கொடுத்தவர் இயற்கை நாயகன் நம்மாழ்வார்தான்.
இனி பயிரே விளையாது என்ற நிலையில் இருந்த நிலத்தை எல்லாம் பசுமை பயிர் விளையும் பூமியாக்கிய வானகம் இவரது மிகப் பெரிய வெற்றி. நம்மாழ்வார் மறைந்தாலும் அவரது தொண்டர்களாலும் இயற்கை ஆர்வலர்களாலும் தொடர்ந்து நடத்தப்படும் வானகத்தில் இயற்கை வேளாண்மை, தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகள் போன்றவை தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் இயற்கை வேளாண்மை கருத்தாக்கங்களை கொண்டு செல்லப்படுகிறது. இன்று கொஞ்சமாவது இயற்கை உணவு, இயற்கை விஞ்ஞானம் பற்றி பேச ஒரு கூட்டம் உருவாகி இருக்கிறதென்றால் அதற்கு இவர்தான் முதல் வித்து என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி
விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு  சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

டிசம்பர் 29,
வரலாற்றில் இன்று.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்த
உமேஷ் சந்திர பானர்ஜி
அவர்கள் பிறந்த தினம் இன்று.

உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chunder Bonnerjee) (1844 – 1906) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவர் ஆவார். இவர் வங்காளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினர் பதவிக்கு, பிரித்தானிய இந்தியா சார்பாக போட்டியிட்ட முதல் இந்தியர் ஆவார்.

சனி, 28 டிசம்பர், 2019

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை




5,8 ம் வகுப்புகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் தயாரித்தல் சார்ந்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறை நாள் 27.12.2019


டிசம்பர் 28,
வரலாற்றில் இன்று.


 அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார்,
வெர்ஜீனியாவில் பிறந்த தினம் இன்று (1981).
டிசம்பர் 28, வரலாற்றில் இன்று.

தங்கத்தின் விலை ஒரு பவுன்,
ரூபாய் ஆயிரத்தை தாண்டிய தினம் இன்று(1979).

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், தங்கம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையோடும் பின்னிப்
பிணைந்துவிட்டது. ஏழை-எளிய மக்கள், நடுத்தர மக்கள் என்று தொடங்கி, பணக்காரர்கள் வரை எந்த குடும்பத்தில் திருமணம் பேசினாலும், வரதட்சணை வாங்கினாலும், வாங்காவிட்டாலும், கண்டிப்பாக கேட்கும் ஒரு கேள்வி, பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்? என்பதுதான். 1979இல் ஆயிரம் ரூபாயை தாண்டியவுடன் தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறியது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியே.
டிசம்பர் 28,
வரலாற்றில் இன்று.


நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் அவர்களின் பிறந்த தினம் இன்று(1947).


நாஞ்சில் நாடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீர நாராயண மங்கலம் என்னும் ஊரில்பிறந்தவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

இவர் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

மரவள்ளிக் கிழங்கு ருசி... மரணம்வரை போகாது!' - நாஞ்சில் நாடனின் பால்ய நினைவு!

சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

'' 1955ஆம் ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக ராஜ்ஜியங்கள் பிரிக்கப்படாத காலம். என் அம்மா சரஸ்வதிக்கு 18ஆவது
வயதில் திருமணமாகி 19ஆவது வயதில் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். சொந்த ஊர், ஆர்யநாடுக்கு அருகிலுள்ள குன்றின் மேல் இருக்கும் நெடுங்காடு. எனக்கு ஏழுவயசு இருக்கும்போது  அம்மா, தன் ஊருக்கு அழைத்துப் போனார்கள். அழகிய வயல்வெளி, அடர்ந்த மரங்கள், தென்னை, வாழை, மா, பலா தோப்புகள் கொண்ட  நிலம், நூறு அடியில் அழகிய சிறு குட்டை  என  சாலை வசதிகள் இல்லாத கிராமம். வீடுகள் கூட நூறு அடிக்கு ஒன்றாக வெவ்வேறு திசையை பார்த்த வாசல்களை கொண்டதாக இருக்கும்.

அங்கே அம்மாவுக்கு உயிர்த்தோழியான ஒரு முஸ்லிம் பெண்ணை நான் 'உம்மா ' என்றே  அழைப்பேன். என் அம்மா வீட்டுக்கும். உம்மா வீட்டுக்கும் தூரம் அதிகம். அதனால்  என் அம்மா குயில் போன்று இனிமையாக  ' கூ...' என்று வித்தியாசமாக குரல் கொடுக்க, உற்சாகம் பீறிட சிறுசிறு வாய்க்கால்களை கடந்து, பின்னங்கால் தரையில் படாமல் படுவேகமாக ஓடிவருவார் உம்மா. ஏதோ அப்போதுதான் அம்மாவை முதன்முறையாக பார்ப்பதுபோல் வைத்த கண் விலகாமல் உற்றுப்பார்ப்பார். அடுத்து என் பக்கம் திரும்பி என்னை வாரியணைத்துக்  கொள்வார்.  அந்த உடம்பின் வாசம், அரவணைப்பின்  நேசம், கதகதப்பு இப்போது நினைத்தாலும் கண்ணீரில் மிதக்கிறது கண்கள்.

பலகாரங்கள், தின்பண்டங்கள் அறிமுகம் ஆகாத காலம் அது.  மரங்களில் காய்த்த கனிகள், மாவடு, மாபிஞ்சு எல்லாம் எங்கள் கனவு உணவு. மாமரத்தில் பதவிசாக பார்த்து பார்த்து, எலுமிச்சை அளவுக்கு இருக்கும் கொட்டை முளைக்காத மாங்காயை  காம்புடன் பறிப்பார் உம்மா. வீட்டுக்குள் கயிறுகட்டி தொங்கவிட்ட பானைக்குள் இருக்கும் உப்புத்தண்ணீரில் மாங்காயைப் போட்டு இரண்டு மாதங்கள் ஊறவிடுவார். நான், அம்மா ஊருக்கு போகிறபோதெல்லாம் பின்னங்கால் தரையில் படாமல் கால் ஊன்றி எக்கி இரண்டு, மூன்று மாங்காய்களை  கண்களின்  பாசம் பொங்க, ஆசையாய் என் கைகளில் கொடுப்பார். அந்த உப்புத்தண்ணீரில் ஊறிய மாங்காய் ருசி, உண்ண உண்ண நாவில் எச்சில் நதியாய் ஊற்றெடுக்கும்.

ஒருமுறை தென்னை மரத்தில் கொய்யாப் பழ அளவுக்கு  குலைகுலையாய் இருக்கும் குரும்பைகளை பறித்து விளையாடிக் கொண்டு இருந்தேன். தேங்காயாக வேண்டிய குரும்பைகளை  நான் அழித்ததால் உம்மாவுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. ஓடிவந்து என் பின்பக்கம் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். அப்புறம் என்ன  நினைத்தாரோ அன்புடன் என்னை கண்கலங்க அரவணைத்துக் கொண்டார். அதுதான் என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட முதல்பாடம். உம்மா அடித்த அடி அப்போது வலித்தது, இப்போது  இனிக்கிறது.

நாஞ்சில் நாட்டில் தினமும் எங்களுக்கு காலையில் பழைய சோறு, மதியம் சுடுசோறு, இரவு தண்ணீர் ஊற்றிய சோறுதான் உணவாக கிடைக்கும். மாதத்திற்கு ஒருமுறை எப்போதாவது அபூர்வமாக இட்லி, தோசை சுடுவார்கள். இப்படியே சாப்பிட்டு பழகிய எனக்கு, அம்மா ஊரில் சாப்பிட்ட‌ மரவள்ளிக் கிழங்கு ருசி மரணம்வரை போகாது. அரிசிக் கஞ்சியை தொன்னையில் ஊற்றிக் கொடுப்பார்கள். தொட்டுக்கொள்ள குழம்பு மீன் கொடுப்பார்கள். அப்படி ஒரு ருசியை இதுவரை அனுபவித்ததே இல்லை.

அம்மா ஊரில், வீட்டு வாசலிலேயே ஏகப்பட்ட பாம்புகள் நெளிந்து வளைந்து ஓடும். ஒருவர்கூட பயப்பட மாட்டார்கள்.  'அப்படி போப்பா...' என்று அதனிடம் பேசுவார்கள். ஒவ்வொரு  வீட்டுக்குப் பின்னாலும் ஒரு ஏக்கருக்கு காடு இருக்கும். அதற்கு சர்ப்பக
டிசம்பர் 28,
வரலாற்றில் இன்று.

இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினம் இன்று(1885).

 ஆலன் ஆக்டேவியன் ஹூயும் (Octavian Hume) தலைமையில் 72 முக்கிய பிரதிநிதிகள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் .
மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது .
டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானது. முதலில் வேண்டுகோள்கள் , விண்ணப்பங்கள் ,
தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக் கொண்டிருந்தது . மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்தபொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் . ஆனால் அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு பண்ண செய்தது .
வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சினையில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என காங்கிரஸ் உடைந்து பின் மீண்டும் இணைந்தார்கள் .