புதன், 8 நவம்பர், 2017

DEE PROCEEDINGS- கரும்பலகை திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4526 தொடர் நீட்டிப்பு தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற கருவூலத்திலிருந்து பணியிடம் குறித்து உரிய சான்றுகள் கோருதல் சார்பு

நவம்பர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை


👉 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு

👉CRC level science exbition (9-11-17)

👉கலைத்திருவிழா

👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்

👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்

👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.

👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)

👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3  spell)

👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு  ஈடு செய்வேலைநாள்

👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்

👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார்த்தல்,

👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,
தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்

👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன்படுத்துதல்

👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்

👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துத்துதல்

செவ்வாய், 7 நவம்பர், 2017

இன்று நடைபெறும் தேசிய அடைவு ஆய்வு(NAS EXAM)இரண்டாம் மாதிரி தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.


'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

விண்வெளிக்குச் சென்ற சிறுவனின் செயற்கைக்கோள்!

டென்னிஸ் பந்தை விட எடை குறைவான செயற்கைக்கோள் 
ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி, இந்தியாவைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான். இது 3D பிரிண்டரில் மூலம் வடிவமைக்கப்பட்ட முதல் சாட்டிலைட் ஆகும்.

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, `கியூப் இன் ஸ்பேஸ்' என்ற தலைப்பில் உலகம் முழுதும் உள்ள 11 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்கும் போட்டி ஒன்றை நடத்தியது. `க்யூப் சேட்' என்ற 10 சதுர செ.மீ அளவு உள்ள பெட்டிக்குள் பொருந்தும் அளவிலான செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைப்பதே அந்தப் போட்டியின் நோக்கமாகும். ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், 80 சிறந்த செயற்கைக்கோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

G.O.Ms.No.314 Dt: October 25, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Special Pension / Special Family Pension / Lumpsum grant to the Noon-Meal Workers, Anganwadi Workers and Village Panchayat Secretaries – Orders – Issued

திங்கள், 6 நவம்பர், 2017

SSA-SPD PROCEEDINGS-கற்றல் விளைவுகள் பயிற்சி - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பு

TNOU B.ED ADMISSION 2018


தமிழ்நாடு பல்கலையில், நவம்பர்-30 வரை,
பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலை பதிவாளர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

'இதன்படி, நவம்பர்-30 வரை, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

CPS ல் உள்ளவா்கள் இந்த வெப்சைட்டில் சென்று Missing Credits உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.


http://cps.tn.gov.in/public/

User id- CPS NO
Password- Date Of Birth

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக 
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in